நிஜவுலகில் திருடர்கள்,கொள்ளைக்கார்கள் இருப்பதுபோல் இணையஉலகிலும் திருடர்கள் உள்ளனர். இவர்களையேஹேக்கர்கள் எனஅழைக்கிறார்கள்.. அதாவது ஒரு கணினிவலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ளகணினியில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்துஉரிமையாளரின் அனுமதியின்றிஊடுறுவல் செய்துதகவல்களைத் திருடுவதை“hacking -ஹேக்கிங்” எனப்படுவதோடுஅச்செயலில் ஈடுபடுபவர்களை ” hackers – ஹேக்கர்கள்” எனவும் அழைப்படுகிறார்கள்.
மேற்சொன்னவாறு ஹேக்கர்களை வரையறுப்பதும் தவறுதான். ஏனெனனில் ஹேக்கிங் என்பது இணையத்தில் தகவல் திருட்டில் ஈடுபடுவதுமட்டுமன்றி உரிமையாளர்அனுமதியின்றி ஒரு கணினியிலிருந்து நீங்கள் எந்ததகவலைப் எடுத்துப் பயன் படுத்தினாலும் அதுஹேக்கிங் இல் சேரும்.
உதாரணமாக நான் எனது மடிக்கணின்யையோ கையடக்கத் தொலைபேசியையோ அலுவலக அறையில் விட்டுச் சென்ற பின்னர் அதனை எனது அனுமதியின்றி எடுத்து அதன் கடவுச் சொல்லைக் கண்டறிந்து அவற்றிலிருந்து எனது தனிப்பட்டதகவல்களை எடுத்திருந்தால் அதுவும் ஹேக்கிங்தான்.
ஹேக்கர்கள் என்போர் சாதாராணகணினிப் பயனர்கள் அல்லர். அவர்கள் கணினிவலையமைப்பு (Networking) துறை மற்றும் கணினி மொழிசார்ந்த துறைகளில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் நமது கணினியை அல்லதுமொபைலை ஊடுருவி அதன் தனிப்பட்ட தகவல்களைக் களவாடிச் செல்லக் கூடியவர்கள்.
அதனால் ஹேக்கிங் என்பது சைபர் குற்றங்களில் (Cyber crimes) அடங்குகிறது. சைபர்குற்றம் என்பது கணினிகள் மற்றும் கணினிவலையமைப்புக்கள், இணையம் போன்றவற்றை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன் படுத்துவதைக் குறிக்கிறது. .
ஹேக்கிங்கில் இணையதள ஹேக்கிங்,வலையமைப்பு ஹேக்கிங், மின்னஞ்சல் ஹேக்கிங்,கடவுச்சொல் ஹேக்கிங், கணினி ஹேக்கிங் என பல வகைகள் உள்ளன. அதேபோல் ஹேக்கர்களிலும் மூன்றுவகையினர் உள்ளனர்.
கருப்புத் தொப்பி ஹேக்கர் (Black hat hackers)
இவர்கள் ஹேக்கிங் -ஐ தொழிலாகச் செய்துபணம் சம்பாதிப்பவர்கள். இவர்கள் தமதுஹேக்கிங் திறமையை முற்று முழுதாக சட்டவிரோதநடவடிக்கைகளுக்கே பயன் படுத்துவர்.
வெள்ளைத் தொப்பி ஹேக்கர் (White hat hackers)
இவர்கள் தமது நிறுவன கணினி வலையமைப்பில் உள்ள பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளைக் (loop holes) கண்டறிந்து சரி செய்பவர்கள். இவர்கள் தங்களதுஹேக்கிங் திறமைகளை நல்ல நோக்கத்திலேயே பயன் படுத்துவதோடு ஒரு போதும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தமாட்டார்கள். இவர்களின் பணியயையே எதிக்கல் ஹேக்கிங் (hacking)எனப்படுகிறது,
சாம்பல் நிறத் தொப்பி (Grey hat hacker)
இவர்கள் தங்களது திறமையை நல்லது கெட்டது என இரண்டு நோக்கிலும் பயன்படுத்தக்கூடியவர்கள். தங்களது நிறுவனத்தில் வேலைசெய்யும் போது White hat ஹேக்கராகவும். பிறநேரங்களில் Black hat ஹேக்கராகவும் ஆகவும் செயற்படக்கூடியவ்ர்கள்.
நிதி மற்றும் தகவல்களைக் கையாளும்,வங்கிகள் போன்ற பெரும் நிறுவனங்களின் கணினி வலையமைப்புக்களில் ஹேக்கர்களின் தாக்குதல்கள் பெரும் இழப்பைஏற்படுத்தும். இது போன்ற இழப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு இந்நிறுவனங்கள் தமது கணினி வலையமைப்பிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்துஅவற்றை இல்லாமல்ச் செய்ய எதிக்கல் ஹேக்கர்களை (நன்நெறிஹேக்கர்கள்) ஒப்பந்தஅடிப்படையிலோஅல்லது முழு நேரஊழியராகவோ பணியில் அமர்த்துகின்றன.
அவர்கள் தமதுஹேக்கிங் திறமைகளையும் தந்திரங்களையும் பயன்படுத்தி நிறுவனத்தின் அனுமதியுடன் தமது நிறுவன கணினிவலையமைப்பிற்கு எதிரானதாக்குதலைமுன்னெடுப்பர்.அல்லதுகணினிவலையமைப்பிலுள்ள் குறைபாடுகளைக் களைவர்.
தற்போது இணையஉலகில் ஹேக்கர்களின் ஊடுறுவல் அதிகமாகக் காணப்படுகின்றன. அதனால் இணைய பாதுகாப்புப் பணிக்கான (Cyber security) தேவையும் வளர்ந்துவருகிறது. பெரும் நிறுவனங்களும் கருப்புத் தொப்பி ஹேக்கர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்க எத்திக்கல் ஹேக்கர்களின் உதவியை நாடிய வண்ணம்உள்ளனர். இதன் காரணமாக எதிக்கல் ஹேக்கர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளதுடன் எதிக்கல் ஹேக்கிங் சார்ந்த கற்கை நெறிகளும் தற்போது மிகப் பிரபல்யமடந்துவருகின்றன.