Disappearing Messages – a new Whatsapp feature

Disappearing Messages – A new Whatsapp feature வாட்சப் உரையாடல்களை ஏழு நாட்களுக்குப் பிறகு சுயமாக அழியும் வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

Disappearing Message

Disappearing Messages எனும் செய்திகளை சுயமாக மறைந்துவிடுமாறு செய்யும் இந்த வசதி தேவையற்ற படங்கள் வீடீயோக்களை ஏழு நாட்களுக்கு மேல் உங்கள் சாதனத்தில் தங்க விடாமல் அவற்றை அழித்து வாட்சப் செயலியே சேமிப்பிடத்தை நிர்வகிப்பதில் உதவுகிறது.

ஆனாலும் எல்லா செய்திகளும் இவ்வாறு ஏழு நாட்களுக்குள் மறைந்து விடாது. எந்த நண்பருடன் நடாத்திய உரையாடலை தானாக மறையுமாறு செய்ய வேண்டும் என்பது உங்கள் தெரிவாகும். குழு அரட்டையாக இருந்தால் செய்திகளை மறைந்து விடுமாறு செய்வதா இல்லையா என்பதை குழு நிர்வாகி தீர்மானிக்கலாம்.

மேலும் இந்த அம்சத்தை வாட்சப் செயலியில் இயக்கியதும்  நீங்கள் அதற்கு முன்னர் அனுப்பிய செய்திகளை அழிக்காது. இந்த வசதியை இயக்கிய நாளிலிருந்து  வரும் புதிய செய்திகளை மட்டுமே அழிக்கும் . உரைச் செய்தி (text messages) மட்டுமன்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இது அகற்றும், இருப்பினும், நீங்கள் தானாக பதிவிறக்கம் (auto-downloa  செய்திருந்தால் மீடியா கோப்புக்களை தொலைபேசியிலேயே விட்டு வைக்கும்.

இந்த வசதியை இயக்கியதும் உங்களுக்கு வரும் செய்திகளை ஏழு நாட்களுக்குள் படிக்காவிட்டாலும் மறைந்துவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஏழு நாள் காலக்கெடு முடிந்ததும், ​​நீங்கள் அச் செய்தியைப் படிக்க முடியாது. ஆனால் உங்கள் வாட்சப் அறிவிப்புகளில் (notifications) முன்னோட்டத்தைக் காணலாம்.

Disappearing Messages

மேலும் ஏழு நாள் காலக்கெடுவிற்கு முன்பே உங்கள் செய்தியை ஸ்க்ரீன் ஷொட் எடுப்பதையோ நகலெடுப்பதையோ இது தடுக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வாட்சப் பயன்பாட்டில் அதிக தனியுரிமையை (privacy) விரும்பும் நபர்களுக்கு இது பயனளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, மாறாக சில பயனர்கள் பழைய உரையாடல்களை மீண்டும் மீண்டும்  பார்வையிடும் வசதியை  வைத்திருக்க விரும்புவதும் உண்டு.

வாட்சப்

வாட்ஸ்அப்பில் தானாக செய்திகள் மறையும் இந்த வசதியை  Disappearing Messages மிக எளிதாக  இயக்க அல்லது முடக்க முடியும்  மேலும் இந்த செயன்முறை அண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன்க இரண்டிற்கும் ஒரே மாதிரியாக இருக்கும். வாட்சப்பின் இப்புதிய அம்சத்தை நீங்கள் முயற்சிக்க விரும்பினால், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

1. வாட்சப் செயலியைத் திறந்து கொள்ளுங்கள்.

2. உங்கள் நண்பர் அல்லது தொடர்பாளர் பெயரைத் தேர்ந்தெடுத்து Disappearing Messages  என்பதன் மீது அழுத்துங்கள்..

3. Continue > On  என்பதைத் தட்டுங்கள்.

இந்த  வசதியை  முடக்க விரும்பினாலும் , மேலே குறிப்பிட்டுள்ள அதே படிமுறைகளைப் பின்பற்றுங்கள். ஆனால் Continue > Off என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

இந்த வசதி உலகளவில் எல்லோருக்கும் தற்போது கிடைக்காது. எனினும் இம்மாத இறுதிக்குள் அனைத்து வாட்சப் பயனர்களாலும் பயன் படுத்தக் கூடியதாய் இருகும்.

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *