Digital Divide – இலக்கமுறை இடைவெளி

ஒரு நாட்டில் அல்லது சமூகத்தில்  தகவல் தொழில்நுட்பத்தை அணுகக் கூடிய வர்களுக்கும் அணுக முடியாதவர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளியே டிஜிட்டல் பிளவு அல்லது பிரிப்பு எனப்படுகிறது.  

இந்த டிஜிட்டல் பிளவின் அளவு பெரிதாக இருப்பின் அந்த சமூகத்தில் அல்லது நாட்டில் தகவல்  தொழிநுட்ப பயன் பாடு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதுடன் இடைவெளி சிறிதாக அல்லது குறைவாக இருப்பின் அந்த சமூகம் தகவல் தொழிநுட்ப பயன் பாட்டில் சிறந்த நிலையில் உள்ளது எனவும்  முடிவுக்கு வரலாம்.

இன்னும் எளிமையாக விளக்கினால், ஒரு பாடசாலையிலுள்ள  100 ஆசிரியர்களில்   10 பேர்  மட்டுமே கணினி, மொபைல் சாதனங்கள் மற்றும் இணைய பயன் பாடு பற்றி அறிந்தவர்களாக இருக்கிறார்கள்  எனின் அங்கு டிஜிட்டல் பிளவின் அளவு  அதிகமாகும்.

அதற்கான காரணங்களை இனம் கண்டு  உரிய தீர்வை வழங்கும் போது டிஜிட்டல் பிளவின் அளவவை சிறிதாக மாற்றவோ அல்லது டிஜிட்டல் பிளவை முற்றாக இல்லாமலே செய்யவோ முடியும்.

டிஜிட்டல் பிளவிற்கான காரணங்கள்

  1. வறுமை / குடும்ப பொருளாதார நிலை

2. கலவி வசதியின்மை

3. மின்சசார வசதியின்மை

4. இணைய வசதியின்மை

5. கணினி / மொபல் ஃபோன் போன்ற சாதனங்களின் அதிக நிலை

6. குடும்பத்தில் / சமூகத்தில் விதிக்கப்படும் தடை / சூழ்நிலை

7. புதிய தொழிநுட்பங்களில் ஆர்வமின்மை

8. தொழி நுட்பத்தைப் பயன்படுத்தப் பயப்படல்

9. வயது

டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கான தீர்வுகள்

  1. டிஜிட்டல் தொழிநுட்பத்தில் மக்களை ஆர்வமூட்டல் / சுய கற்றலை

2. கணினி மற்றும் இணைய வசதியுடன் கூடிய கல்வி நிலையங்களை அனைத்து கிராமங்களிலும் அமைத்தல்

3. இணைய வசதி மின்சார வசதி இல்லாத பிரதேசங்களில் அவ்வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

4, பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவிலிருந்தே தகவல் தொழிநுட்ப பாடத்தை அறிமுகம் செய்தல்

5.அனைத்து பாடசாலைகளுக்கும் கணினி வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல்

6. கணினி, மற்றும் மொபைல் சாதனங்கள் மற்றும் இணைய பயன் பாடு போன்றவற்றிற்கு குறைந்த வரி விதித்தல்

7. தினசரி வாழ்க்கையில் தகவல் தொழி நுட்பத்தைப் பயன் படுத்தத் தூண்டுதல்

8. மாணவர்களை மட்டுமல்லாது வயதானவர்களையும் தகவல் தொழிநுட்பத்தைப் பயன் படுத்த ஆர்வமூட்டல்

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …