General

கணினியை பென்ட்ரைவ் மூலம் லொக் செய்வதற்கு..

கணினியை அனுமதியின்றி எவரும் பயன் படுத்தாமல் இருக்கவிண்டோஸ் இயங்கு தளத்தில் கடவுச் சொற்கள்  வழங்கிப்பலரும் பயன் படுத்துவதுண்டு. எனினும் அந்தக் கடவுச்சொல்லை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டியதுஅவசியம். மாறாக  Rohos Logon Key  எனும் சிறிய மென்பொருள்பாஸ்வர்டுக்குப் பதிலாக உங்கள் பென் ட்ரைவையே பாஸ்வர்டாக பயன் படுத்தக் கூடிய  வசதியைத் தருகிறது. இந்த மென்பொருளை rohos.com  எனும் இனையதளத்திலிருந்து டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள்பென் ட்ரைவை கணினியில் செருகி மென்பொருளை  இயக்குங்கள். அதனை இயக்கியதும் தோன்றும் சிறிய விண்டோவில் Setup USB Key  என்பதைத் தெரிவு செய்துகொள்ளுங்கள். அப்போது தோன்றும் சிறிய பெட்டியில் உங்கள்  பென் ட்ரைவுக்குரிய  எழுத்தைத் தெரிவு செய்து உங்கள் பயனர் கணக்குக்குரிய  விண்டோஸ் பாஸ்வர்டை வழங்கி  Setup USB Key  என்பதைக் க்ளிக் செய்யுங்கள். இப்போது பென்ட்ரைவைக் கணினியிலிருந்து அகற்றி மறுபடிகணினியை இயக்குங்கள். இப்போது கணினி இயங்கஅரம்பித்ததும் லொக் ஓன் திரையுடன்நின்று விடும். அப்போதுபென்ட்ரைவை மறுபடியும் கணினியில் செருகுங்கள்உடனேடெஸ்க்டொப் திரைக்கு வந்து விடும்

Read More »

Map Network Drive  பயன்பாடு என்ன?

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் வைத்திருப்பின் அவற்றை இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பயன் படுத்துவதன் மூலம் பல வசதிகளைப் பெறலாம். அவற்றில் ஃபோல்டர்களை பகிர்வதன் (sharing) மூலம் இலகுவாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குப் ஃபைல்களைப் பரிமாற முடியும். ஒரு கணினியில் ஃபோல்டர் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட பின்னர் அடுத்த கணினியிலிருந்து இரண்டு வழிகளில் அதனை அணுகலாம். முதல் வழி அந்த ஃபோல்டரை நேரடியாகத் திறந்து கொள்வதாகும். அதாவது File explorer இல் Network ஐக்கானை …

Read More »

Google  Translate இல் இத்தனை வசதிகளா?

கூகில் மொழி மாற்றியைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பதோடு பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் விரும்பும் எந்த மொழியிலும் இலகுவாக மாற்றம் செய்து கொள்ள முடியும். உலக  மொழிகளில் சுமார்   100 மொழிகளை அறிந்து வைத்திருக்கிறது இந்த கூகில் மொழி மாற்றி. எனினும் இந்த கூகில்  மொழி மாற்றி சேவை தரும்  வசதியை இது வரை  தெரியாத சொற்களுக்கும், சொற் தொடர்களுக்கும்  பொருள் தேடவே பயன் படுத்தியிருப்பீர்கள்.  ஆனால் அவை …

Read More »

தொலைவிலுள்ள கணினியை அணுக Chrome Remote Desktop

Chrome Remote Desktop குரோம் ரீமோட் டெஸ்க்டாப் என்பது தொலைவிலிருந்து வீட்டுக் கணினியையோ அல்லது அலுவலகக் கணினியையோ  அணுகக் கூடிய வசதியைத் தரும் ஒரு செயலியாகும்.. இந்த  Remote Desktop  வசதி மூலம் உங்கள் விண்டோஸ் கணினியிலிருந்து அல்லது ஒரு அண்ட்ராயிட் (Android) இயங்கு தளத்துடன் கூடிய கையடக்கக் கருவியிலிருந்து இணையத்தின் ஊடாக உலகின் எப்பாகத்திலுமுள்ள உங்களுக்குச் சொந்தமான வேறொரு கணினியை இயக்கவோ அதிலுள்ள கோப்புக்களைத் திறந்து பணியாற்றவோ அல்லது …

Read More »

உங்கள் பேஸ்புக் பக்கம் உங்கள்  நண்பருக்கு எவ்வாறு தோன்றும்?

உங்கள் பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிடும் எவரும் நீங்கள் யார், உங்கள் கல்வித் தகைமை என்ன,  உங்கள் விருப்பு வெறுப்புக்கள் என்ன, உங்கள் நண்பர்கள் யார், போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் பதிவிடும் விடயங்கள்  பகிரங்கமானவை (Public)  என அனுமதி வழங்கி விட்டால் உங்களை தனிப்பட்ட முறையில் அறியாதவர்கூட அவற்றைப் பார்வையிட முடியும். உங்கள் பதிவுகளைப் பகிரங்கப் படுத்துவதனால்   சில வேளைகளில் உங்களுக்கு சில சங்கடங்களையும் ஏற்படுத்தக் …

Read More »