Beta Version என்றால் என்ன?


ஒரு மென் பொருளை உருவாக்கிய பிறகு அல்லது மேம்படுத்திய பிறகு அதனைச் சந்தைப்படுத்த முன்னர் மேலும் சில படிநிலைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. அவற்றுள் முதற்படியை அல்பா நிலை (Alfa stage) எனப்படும். அலபா நிலையில் அம்மென்பொருள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப் பட்டு பிழைகளிருப்பின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பீட்டா பதிப்பு (Beta Version) வேர்சன் எனப்படுவது மென்பொருள் பரிசோதனையின் இரண்டாம் நிலையைக் குறிக்கிறது. பீட்டா நிலையில் அந்த மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பாவனையாளர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அம்மென்பொரு ளிலுள்ள நிரை குறைகள் கண்டறியப்படும்.
ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பை ஒரு முன்னோட்டமாகக் கருதலாம். ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பு அந்த மென்பொருளுக்குரிய அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும். எனினும் பரந்த அளவிளான விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்காது. இந்த நிலையில் பீட்டா பதிப்பை பயன்படுத்துவோரிடமிருந்து மென்பொருள் பற்றிய கருத்துக்கள் சேகரிக்கப்படும். மென்பொருளை வெளியிட முன்னர் அவர்கள் எதனை விரும்புகிறார்கள், எதனை நீக்க வேண்டும் எதனை மாற்ற வேண்டும் போன்ற விவரங்களை அந்நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.பீட்டா பதிப்பிலும் மூடிய பீட்டா (closed beta) திறந்த பீட்டா (open beta) என இரு வகைகளும் உள்ளன. . ஒரு குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை மூடிய பீட்ட பதிப்பு எனப்படுகிறது. திறந்த பீட்டா பதிப்பு பொது மக்கள் யாவரும் பயன்படுத்துமாறு வழங்கப்படுவதாகும். பீட்டா பதிப்பில் இறுதியாக வெளிவிட விருக்கும் பதிப்பில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் கொண்டிருந்தாலும் அதன் பயனர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொழில் நுட்ப உதவியையே வழங்கும். சில நிறுவனங்கள் தமது மென்பொருளைப் பல வருடங்களுக்கு பீட்டா பதிப்பிலேயே விட்டு வைக்கும். அப்போது முழுமையான பதிப்பைப் போலவே அதனைப் பலரும் பயன்படுத்தலாம்..

பீட்டா எனும் வார்த்தை கிரேக்க மொழி அரிச்சுவடியில் இரண்டாவது எழுத்தைக் குறிக்கிறது என்பது நீங்கள் அறிந்த விடயமே. பீட்டா பதிப்பு அல்லது பீட்டா சோதனை எனும் வார்த்தையை ஐபிஎம் நிறுவனமே முதலில் அறிமுகம் செய்தது. ஐபிஎம் நிறுவனம் தனது கணினி வன்பொருள் சாதனங்கள் முறையாக இயங்குகிறதா எனச் சோதிப்பதற்கே பீட்டா சோதனை எனும் வர்த்தையைப் பயன்படுத்தியது, எனினும் தற்போது இந்த வார்த்தையை மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களளும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. அனேகமான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்க்ள் பாவனைக்காக வெளியிட முன்னர் பீட்டா பதிப்பையே முதலில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

About admin

Check Also

What is Discord and how to use it?

டிஸ்கார்ட்-Discord என்பது உரை அரட்டை-text chat, குரல் அரட்டை voice chat, வீடியோ அரட்டைvideo chat, மற்றும் கோப்பு பகிர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *