Quora – A flatform to ask and answer questions

Quora – A flatform to ask and answer questions Quora கோரா என்பது ஒரு பிரபலமான கேள்வி பதில் இணைய தளம். இது அமெரிக்கர்களான Adam D’Angelo மற்றும் Charlie Cheever எனும் இரு சாஃப்ட்வெயார் டெவலப்பர்களால் 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இன்று உலகின் மிகப்பெரிய கேள்வி பதில் (Q&A) தளமாக கோரா உருவெடுத்துள்ளது.

Quora

இணைய பயனர்களிடையே  அறிவு மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கலந்துரையாடல் மன்றங்கள் (discussion forum) மற்றும் Quora, Yahoo Answers, LinkedIn, Stack overflow போன்ற பல சிறந்த  கேள்வி பதில் தளங்கள் உள்ளன.  இவற்றுல், கோரா தளம் முதலிடம் வகிக்கிறது.  

கோரா தளமானது தினமும் சுமார் ஒரு மில்லியன் பயனர்களால் பார்வையிடப்படுகிறது. அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், வணிகம், அரசியல் போன்ற ஏராலமான பல்வேறு தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றிற்கான பதில்கள் அத்துறைகளில் ஆழமான அறிவும் அனுபவமும் உள்ள பிற பயனர்களால் வழங்கப்படுகின்றன. பயனர்கள் இந்த கோரா மேடையில் ஒருவருக்கொருவர் இணைந்து ஒத்துழைக்கவும் அறிவைப் பரிமாரிக் கொள்ளவும் முடிகிறது.

Quora

Quora மிகவும் எளிமையான பயனர் இடைமுகத்தைக் கொண் டுள்ளது.  இந்த இணைய தளம் உலகளவில் 20+ க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. அந்த மொழிகளில் தமிலும் அடக்கம் என்பது மகிழ்ச்சியான விடயம். கோரா தமிழ் பதிப்பு 2018 ஆண்டின் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

கோரா தளத்தைப் பயன்படுத்த, முதலில் நீங்கள் ஒரு பயனர் கனக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் ஒரே கோரா கணக்கினைப் பயன்படுத்தலாம்.

கோரா தளத்தில் உள் நுழைந்ததும், ஒரு டேஷ்போர்டைக் (dashboard) காண்பிக்கும். அங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம், பதில் களை வழங்கலாம். உங்களுக்கு விருப்பமான தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் உங்களுக்கு ஆர்வமுள்ள விடயங்க ளைப் பின் தொடரலாம்.

ஒரு பயனர் அளிக்கும் எந்தவொரு பதிலுக்கும், நீங்கள் ஒரு கருத்தை அல்லது பின்னூட்டத்தை இடலாம். அந்த பதிலுக்கு வாக்களித்து அல்லது விருப்பம் தெரிவித்து அந்த பதிலை (upvote) மேலுயர்த்தலாம். பதிலை விரும்பாவிடின் வாக்களித்து கீழிறக்கியும் விடலாம். இந்த அப்வோட் / டவுன்வோட் மூலமே ஒரு பதிலின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இது பேஸ்புக்கில் எமது செயற்பாட்டுக்கு ஒத்ததாக இருந்தாலும் அதனை விட ஒரு மேம்பட்ட அம்சம் கோராவில் தெரிகிறது. பதிலை விரும்புவது மற்றும் கருத்து தெரிவிப்பதைத் தவிர நீங்கள் பல சமூக ஊடகங்களில் பதிலைப் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது நீங்கள் பெற்ற அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் திறன் மற்றும் அறிவின் அடிப்படையில், வேறு பயனர்கள் கேட்கும் கேள்விக்கும் நீங்கள் பதிலளிக்கவும் முடியும், மேலும் உங்கள் பதில் எத்தனை பேரால் பார்க்கப்பட்டன (பார்வைகள் Views) என்பதையும் அறிந்து கொள்ளலாம். இது Quora தளத்தில் ஒரு பின்தொடர்வோர் பட்டியலை (followers list) உருவாக்க உதவும். உங்கள் பதிலில் உரை (text) படங்கள் (images) மற்றும் இணைப்புகளையும் (hyperlinks) சேர்க்கவும் முடியும்.

அதேபோல், உங்களுக்கு சந்தேகம் உள்ள விடயங்களைப் பற்றி நீங்கள் கேள்வியும் கேட்கலாம் . உங்கள் கேள்வியின் அடிப்படையில் Quora இல் உள்ள வேறு பயனர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.

கோராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்பேசஸ் (spaces) எனும் அம்சம் மூலம் விடயம் சார்ந்த பயனர் குழுக்களை உருவாக்கிக் கொள்ளலாம். அவர்களுடன் கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளலாம்.

கோராவைப் பற்றி இது வரை அறியாமல் இருந்தவர்கள் இன்றே கோராவைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள். கோராவைப் பயன் படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கோரா டெஸ்க்டொப் பதிப்பு தவிர மொபைல் செயலியாகவும் கிடைக்கிறது.

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *