எல்லா பைல் வீடியோ போமட்டுகளையும் எல்லா ஊடகங்களிலும் பயன் படுத்த முடிவதில்லை. உதாரணமாக நீங்கள் நேற்று டிவிடியில் பார்த்த ஒரு திரைப்படத்தை அல்லது பாடலை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து கொள்ள விரும்பினால அதனை டிவிடி வீடியோவாகவே பதிந்து விட முடியாது. அந்த செல்போன் ஆதரிக்கும் ஏதொவொரு வீடியோ பைல் போமட்டில் அந்த டிவிடி வீடியோவை மாற்றியே பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஒரு பைல் போமட்டிலிருந்து மற்றுமொரு பைல் போமட்டுக்கு மாற்றுவதற்கென ஏராளமான மென்பொருள்கள் பாவனையிலுள்ளன. ஆனால் அவையனைத்தும் எல்லா வகையான வீடியோ பைல் மோமட்டுகளையும் ஆதரிப்பதில்லை.
அனேகமான மென்பொருள்கள் கொண்டு வீடியோ பைல் போமட்டை மாற்றும் போது வீடியோவின் தரம் குறைவதோடு அதனை மாற்றும் செயற்பாட்டிற்கு அதிக நேரமும் எடுத்துக் கொள்கின்றன..
வீடியோ பைல் போமட்டுகளை மாற்றுவது மட்டுமன்றி YouTube போன்ற இணைய வீடியோ க்ளிப்புகளையும் டவுன்லோட் செய்து தரும் வசதியையும் இது கொண்டுள்ளது. இலகுவான இடைமுகப்பைக் கொண்டுள்ள எனி வீடியோ கன்வேட்டர் மென்பொருளை www.any-video-converter.com எனும் இணைய தளத்திலிருந்து இலவச்மாக தறவிறக்கம் செய்யலாம். இதன் பைல் அளவு 13 MB. எனி வீடியோ கன்வேட்டர் மென்பொருள் அதன் பெயருக்கேற்ற வாறு சிறப்பாகவே செயற்படுகிறது. -அனூப்