adobe photoshop camera
adobe photoshop camera

Adobe Photoshop Camera-தற்போது ப்லே ஸ்டோரில்

Adobe Photoshop Camera – செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்துடன் கூடிய Artificial Intelligence (AI) அடோபி ஃபோட்டோஷாப் கேமரா செயலி  தற்போது  கூகுள் பிளே ஸ்டோரிலும் மற்றும் ஆப்பில் ஆப்ஸ்டோரிலும் வெளியிடப்பட்டுள்ளது

மேலும் வாசித்து நேரத்தை வீணாக்காமல் இப்போதே ப்லே ஸ்டோருக்கு ஓடுங்கள்

பிளே ஸ்டோரில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு கேமரா செயலிகளின்  நீண்ட பட்டியலில்  அடோபியும் தற்போது  இணைகிறது, ஆனால் இச் செயலி தனித்துவமான விஷேட பல வசதிகளைக் கொண்டுள்ளது. நீங்கள் இந்த செயலியைக் கொண்டு எடுக்கும் படங்களில் உள்ளவற்றை அடையாளம் காண, இச்செயலி அடோப்பின் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

adobe play store

மேலும்உங்கள் புகைப்படங்களை மேம்படுத்தப்  பயன்படுத்தக்கூடிய 80 க்கும் மேற்பட்ட தனித்துவமான பில்டர்களை  உங்களுக்கு வழங்குவது மட்டுமல்லாமல் படங்களுக்குப் பொருத்தமான ஃபில்டர்களையும் உங்களுக்குப்  பரிந்துரைக்கிறது. அவை ஏற்கனவே உங்கள் மொபைலில் இருக்கும் புகைப்படங்களுக்கோ அல்லது நிகழ் நேரத்தில் எடுக்கும்  படங்களுக்கோ கூட  பயன்படுத்தப்படலாம்.

போட்டோஷாப்பின் டெஸ்க்டாப் பதிப்புகளில் உருவாக்குவதற்கு  கடினமான அடைவுகளை  AI யுடன் கூடிய இந்த அண்ட்ராயிட் செயலி    எளிதாக்குகிறது. மேலும் பயனரின் அதிக  தலையீடின்றி தரமான படங்களை எடுக்க பயனரை அனுமதிக்கும் வகையில் . அதிகளவிலான சிறப்பம்சங்களுடன் வந்திருக்கிறது அடோபி ஃபோட்டோஷாப் கேமரா.

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *