அத்துடன் இந்த இடை முகப்பில் தமிழ் எழுத்துப் பிழை திருத்தம், வகைப்படுத்தல், சொற்களஞ்சியம் போன்ற வசதிகளையும் பெறக் கூடியதாகவுள்ளது. எனினும் சில தமிழ் வார்த்தைப் பிரயோகங்களைப் பார்க்கும் போது தமிழை விட ஆங்கில இடை முகப்பே மேல் என்று கூட சில வேளை எண்ணத் தோன்றும்.
எம்.எஸ். ஒபிஸில் தமிழ் மொழிக்கான இடை முகப்பை பெறுவதற்கு LIP.exe எனும் 6.1 மெகா பைட் அளவிலான கோப்பை, மைரோஸொப்ட் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்தோ அல்லது www.bhashaindia.com எனும் இணைய தளத்திலிருந்தோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழ் இடை முகப்பை நிறுவுவதற்கு உங்கள் கணினியில்
• Windows 2000 Service Pack 3 அல்லது Windows XP
• Mஸ்-Office 2003 தொகுப்புக்களின் ஏதாவதொரு ஆங்லகில பதிப்பு என்பன இருக்க வேண்டும்.
பதிவிறக்கம் செய்த பைலை நிறுவுவதற்கு முன்னர் உங்கள் கணினியில் தமிழ் மொழியை உள்ளீடு செய்யும் மொழியாக மாற்றிக் கொள்ள வேண்டும். விண்டோஸ் 2000 / XP Iல் லதா எனும் யுனிகோட் முறையி லான தமிழ் எழுத்துரு உள்ளிணைக் கப்பட்டுள்ளது. எனினும் விண்டோஸ் எக்ஸ்பியை முதன் முதலில் நிறுவும் போது தமிழ் மொழியை உள்ளீடு செய்வதற்கான பைல்கள் நிறுவப்படுவதில்லை. அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளவும்.
முதலில் கண்ட்ரோல் பேனல் சென்று Regional and Language Options என்பதைத் திறக்கவும். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் (படம்-1) Languages டேபில் க்ளிக் செய்து அங்கு காணப்படும் Supplemental Language Support என்பதன் கீழ் வரும் Install files for complex script and right-to-left languages (including Thai) என்பதைத் தெரிவு செய்து Apply பட்டனில் க்ளிக் செய்யவும். அப்போது ஒரு மெஸ்ஸேஜ் பொக்ஸ் தோன்றி விண்டோஸ் எக்ஸ்பி சீடீயை உட்செலுத் துமாறு சொல்லும். சீடீயை உட்செலுத்த, தேவையான பைல்கள் பிரதி செய்யப்பட்டதும் கணினி ரீஸ்டார்ட் செய்யப்படும்.
மீண்டும் கன்ட்ரோல் பேனலில் Regional and Language Options என்பதை திறக்கவும். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Languages டேபில் Details பட்டனில் க்ளிக் செய்யவும். அப்போது படம்-2 ல் உள்ளவாறு Text Services and Input Languages என்ற மேலும் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அதில் Settings டேபின் கீழ் வரும் Installed Services எனும் பகுதியிலுள்ள Add பட்டனில் க்ளிக் செய்ய Add Input Language (படம்-3) என்ற டயலொக் பொக்ஸ் தோன்றும். அதில் Input Language எனுமிடத்திலுள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்ய ஒரு ட்ரொப் டவுன் லிஸ்ட் வரும். அதிலிருந்து Tamil மொழியைத் தெரிவு செய்வதுடன் Keyboard Layout ஆகவும் Tamil தெரிவு OK க்ளிக் செய்யவும். இப்போது Installed services என்பதன் கீழ் தமிழ் மொழியும் அதற்குறிய கீபோட் ட்ரைவரும் தெரிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னர் OK க்ளிக் செய்து அந்த டயலொக் பொக்ஸை மூடவும்.
அடுத்து பதிவிறக்கம் செய்த LIP.exe எனும் பைலை கணினியில் நிறுவவும். பின்னர் பயனர் இடை முகப்பு மொழியாக தமிழை மாற்றக் கீழ்க்காணும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.
• Start மெனுவில், All Programs Microsoft Office Microsoft Office Tools சென்று Office 2003 Language Settings க்ளிக் செய்யுங்கள்.
• அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் User Interface and Help டேபில் (படம் 4) , Display Office 2003 in எனும் பட்டியலில் நீங்கள் காண்பிக்க விரும்பும் மொழியாக தமிழைத் தேர்வு செய்து OK க்ளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழி அமைப்புகள், அடுத்த முறை ஒபிஸ் பயன்பாடுகளைத் துவங்கும் போது செயற்படுத்தப்படும். அதாவது எம்.எஸ்.வேர்ட், எம்.எஸ்.எக்ஸெல், எம்.எஸ்.பவர்பொயின்ட் மற்றும் எம்.எஸ்.அவுட்லுக் என்பவற்றைத் திறக்கும் போது முற்றிலும் தமிழி லேயே தோற்றமளிக்கக் காணலாம்.
-அனூப்-