இணையத்தில் உங்கள் வீட்டையும் பார்வைIடலாமே !

கூகில் நிறுவனத்தின் கூகில் மேப்ஸ் (Google Maps) இணையதளம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். உலகப் படத்தில் ஒவ்வொரு இடத்தையும் வெறும் கோடுகளாகவே பார்த்துள்ள நாம் இந்த கூகில் மேப்ஸ் மூலம் உலகின் எந்தவொரு இடத்தையும் செய்மதி மற்றும் விமானம் மூலம் (Aerial Photograph) எடுக்கப்பட்ட நிஜ படங்களாகப் பார்க்கலாம். அதாவது நாடு, நகரம், காடு, மலை, ஆறு, குளம், பாதை, கட்டடம், பாலம் என எந்த ஒரு இடத்தையும் பார்க்க முடியும். ஏன், உங்கள் வீட்டைக் கூடப் பார்க்கலாம்.

இணையத்தில் உங்கள் வீட்டையோ அல்லது நீங்கள் அறிந்த இடங் களையோ பார்ப்பதோடு மட்டுமல்லாமால் அடுத்தவர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் அந்த இடங்களை அடையாளமிடக் கூடிய வசதி யையும் தருகிறது மற்றுமொரு இணையதளமான விக்கிமேப்பியா. கூகில் நிறுவனத்தின் கூகில் மேப்ஸ¤டன் இணைந்து இணைய வெளியில் உலாவும் இந்த விக்கிமேப்பியா ஓன்லைன் மேப் உலகின் அனேகமானோர் தரிசிக்கும் முன்னணிஇணைய தளங்களில் ஒன்றாகவுள்ளது.

நீங்கள் வெளியூரோ வெளிநாடோ போய் இனிமேல் எந்த வொரு முகவரியையும் தேடி அலைய வேண்டாம். வேறு யாரிடமும் கேட்கவும் வேண்டாம். உலகின் எந்தவொரு இடத்துக்கும் வழி சொல்லி விடுகிறது இந்த விக்கிமேப்பியா இணைய மேப்.

விக்கிமேப்பியா ஓன்லைன் மேப் Alexandre Koriakine and Evgeniy Saveliev எனும் இரு ரஷ்யர்களால் 2006 ஆம் வருடம் மே மாதம் 24 ஆம் திகதி “எங்கள் புவிக் கிரகத்தை விவரிப்போம்” எனும் நோக்கில் இலட்சினையுடன் உருவாக்கப்பட்டது. இது வரை இந்த உலக வரை (வரையாத) படத்தில் உலகெங்குமுள்ள ஆறு மில்லியன் இடங்கள் அதன் பார்வையாளர்களால் அடையாளமிடப்பட்டுள்ளன.

நீங்கள் அறிந்த ஒரு இடத்தை இந்த மேப்பில் அடையாளமிடலாம். ஒரு இடத்தை அடையாளமிட்ட பின்னர் அந்த இடம் பற்றிய சிறு குறிப்பையும் வழங்கலாம். அடுத்தவர்கள் அடையாளமிட்டிருக்கும் இடம் தவறாயிருந்தால் அதனை நீங்கள் திருத்தக் கூடிய வசதியையும் தருகிறது விக்கிமேப்பியா இணைய தளம்.

நீங்கள் பார்க்க விரும்பும் ஓரிடத்தை இலகுவாகத் தேடித் (search) தருவதோடு ஒரு இடத்தை அண்மித்துப் (zoom) பார்க்கவும் முடிகிறது. சில பிரதேசங்களை பாதுக்காப்புக் காரணங்களுக்காக zoom செய்து பார்க்க அனுமதிப்பதில்ல. அதேபோல் சில பிரதேசங்கள் இன்னும் புதுப்பிக்கப் படாமலும் (update) இருக்கின்றன.

உங்களுக்குத் தெரிந்த ஒரு இடத்தை அடையாளமிடும் போது அந்த இடத்தைச் சிறிய கட்டங்களால் அடையாளமிட வேண்டும். . அத்துடன் அடையாளமிடப்படும் இடம் உங்கள் சொந்த இடமாக இருப்பது நல்லது. ஏனெனில் வேறொருவருக்குச் சொந்தமான இடத்தை நீங்கள் சுட்டிக் காட்டுவது வம்பில்கூட முடியலாம்.

இந்த விக்கிமேப்பியா இணைய மேப்பில் உங்கள் சின்ன வீடி, பெரிய வீடு பக்கத்து வீடு என அடையாளமிட்டு மகிழ நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம்,

-அனூப்-

About admin

Check Also

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மனிதர்களைப் போலவே சிந்திக்கவும் செயல்படவும் திட்டமிடப்பட்ட இயந்திரங்களில் மனித நுண்ணறிவின் உருவகப்படுத்துதல் ஆகும். இந்த …

One comment

  1. அன்பின் அனூப்,

    நல்ல பதிவு நண்பரே.சம்பந்தப்பட்ட இணைய முகவரியை தாருங்கள். நன்றி !

    (Word verification ஐ எடுத்துவிடுங்கள். எழுத்துரு மாற்றவேண்டி இருப்பதால் பின்னூட்டமிடப் பலரும் தயங்குவார்கள் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *