ஸ்விஸ் மேக்ஸ் 2 மூலம் டெக்ஸ்ட் மட்டுமன்றி (sound) ஒலி, (image) ஒளிப்படங்கள், வீடியோ என்பவற்றையும் கையாளலாம். அத்துடன் நேர்கோடுகள், செவ்வகம், சதுரம், நீள்வளையம், வட்டம், வளைந்த கோடுகள் போன்ற (Vector Graphics) வெக்ட க்ரபிக்ஸ் வரைவதற்கான கருவிகளும் இணைந்துள்ளதால் அழகிய இரு பரிமான எனிமேஷன்களை இதன்மூலம் உருவாக்கலாம். ஏன், எளிய காட்டூன் படங்களையும் கணினி விளையாட்டுக்களையும் கூட உருவாக்கலாம். எளிமையான இடைமுகப்புடன் (interface) கூடிய சுவிஸ், Adobe Flash போன்று சிக்கலான மென்பொருளல்ல. இலகுவாகவும் விரைவாகவும் எனிமேஷன்களை உருவாக்கக் கூடியதாகவிருப்பது இதன் சிறப்பியல்பு. சுவிஸில் ஏராளபமான Animation Effects அடங்கியுள்ளன. இதன் மூலம் உருவாக்கப்படும் எனிமேஷன்களை AVI வீடியோ க்லிப், HTML, .swf, .exe பைல்களாக மாற்றிக் கொள்ளவும் முடிகிறது.
ப்ளேஸில் உபயோகிக்கப்படும் SWF பைலாக சுவிஸ் பைலையும் மாற்றக் கூடியதாகவிருப்பதால் ப்ளேஸ் ப்ளேயர் நிறுவப்பட்டுள்ள கணினிகளில் இந்த எனிமேஷன்களை இயக்கிப் பார்க்கலாம். அத்துடன் ப்ளேஸ் மென்பொருளில் சுவிஸ் மூலம் உருவாக்கிய பைல்களை இம்பொர்ட் செய்யக் கூடியதாகவிருப்பதால் ப்ளேஸ் மூலம் மேலும் அதனை மெருகூட்டவும் முடிகிறது. சுவிஸ் மூலம் உருவாக்கிய பைல்களை இனைய பக்கங்களில் வெளியிட முடிவதோடு எம்.எஸ். வேர்ட், பவபொயின்ட் ப்ரசென்டேஸனிலும் கூட இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
சுவிஸ் மென்பொருளை வின்டோஸ் இயக்கச் சூழலின் எப்பதிப்பிலும் நிறுவிக்கொள்ளலாம்.. ஸ்விஸ் மேக்ஸ் 2 மென்பொருளின்ட்ரையல் பதிப்பை www.swishzone.com எனும் இனைய தளத்திருந்து இலவசமாக download செய்து கொள்ள முடியும். . .
-அனூப்-