உங்கள் போல்டரை நீங்கள் மட்டுமே திறந்து பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது விண்டோஸ். இந்த வசதி பயனர் கணக்கிற்குரிய போல்டரிற்குள்ளேயிருக்கும் (user profile folder) My Documents மற்றும் அதற் குள்ளேயிருக்கும் subfolder, Desktop, Start Menu, Cookies, and Favorites போன்ற போல்டர்களை மட்டுமே இவ்வாறு பாதுகாக்கலாம். அத்துடன் இந்த வசதியைப் பெற நீங்கள் விண்டோசஸ நிறுவியிருக்கும் ட்ரைவானது (NTFS – New Technology File System) முறையில் format செய்யப்பட்டிருத்தல் அவசியம்.
போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது?
முதOல் சிஸ்டம் நிறுவியுள்ள ட்ரைவை (அனேகமாக Drive: C ) திறந்து கொள்ளுங்கள். அந்த ட்ரைவிலுள்ள பைல்கள் நீல நிற “போர்வை”யால் மறைக்கப்படிருந்தால் Show the contents of this drive என்பதில் க்ளிக் செய்து போர்வையை நீக்குங்கள். பிறகு அங்கு Documents and Settings போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் பயனர் கணக்குக்குரிய போல் டரைத் திறந்து அதனுள்ளேயிருக்கும் எந்த போல்டரை மற்றவர்கள் அணுகாமல் பாதுகாக்க வேண்டுமோ அந்த போல்டரின் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது வரும் டயலொக் பொக்ஸில் Sharing டேபைக் க்ளிக் செய்து Make this folder private so that only I have access to it என்பதைத் தெரிவு செய்து விடுங்கள். அவ்வளவுதான். இனி எவரும் உங்கள் போல்டர்களை அணுக விண்டோஸ் அனுமதிக்காது.
-அனூப்-