“குறள் ” தமிழ்ச் செயலி

“குறள் தமிழ்ச் செயலி ” எ‎ன்‎பது கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான ஒரு மென்பொருள். இத‎ன்‎ மூலம் இலகுவாக பல்வேறு தமிழ் விசைப் பலகை கொண்டு தமிழில் டைப் செய்யலாம். கலை கந்தசாமி எனும் அமெரிகக வாழ் தமிழரால் இது உருவாக்கப்பட்டுள்ள குறள் தமிழ்ச் செயலி 1999 ஆண்டு முதன் முதலில் அறிமுகமானது. தற்போது பல்வேறு வசதிகளைத் தாங்கி குறள் தமிழ்ச் செயலியின் புதிய பதிப்பு 4 தற்போது கிடைக்கிறது. இதனை www.kuralsoft.com எனும் இணையதளத்திலிருந்து இலவசமாக டவு‎ன்லோட் செய்து கொள்ள லாம். இதன் பைல் அளவு 4.13 MB. எனினும் இலவச பதிப்பில் எல்லா வசதிகளையும் பெற முடியாது. குறள் தமிழ்ச் செயலியின்‎ முழுமையான பயன் பாட்டைப் பெற 35 அமெரிக்க டாலர் செலவிட வேண்டியிருக்கிறது.

குறள் தமிழ்ச் செயலி பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

• யுனிகோட், திஸ்கி, டாப், டாம், லிபி மற்றும் பழைய எழுத்து
வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம்.
• கவிதை தமிழ் ஆங்கில சொற்செயலி (Word Processor)
• SMTP சார்ந்த பறவை மின்னஞ்சல் செயலி (Mail Client),
• தென்றல், எனும் பெயர்த்தகு சாதனங்களுக்கான (Removable Disk)
குறள் செயலி, இதனை எங்கு வேண்டுமானாலும் உங்களோடு
எடுத்துச் செல்லலாம்.
• ஓசை – தமிழ் உரை ஒலி, தமிழை வாசிக்கும் தொழில்நுட்பம் (Text- to-Speech)
• தமிழில் டைப் செய்ய ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகை (phonetic keyboard ) தமிழ்99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகை, புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகை ஆகியவைகளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
• பார்த்து பழக திரைவிசைப்பலகை, இதனைக் கொண்டு மிகச்சுலபமாகத் தமிழில் உள்ளீடு செய்யலாம்.

குறள் தமிழ்ச் செயலி மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும்அனைத்துச் செயலிகளிலும் (Programs) தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஒபீஸ், ஸ்டார் ஒபீஸ், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பொக்ஸ், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடுசெய்யலாம்.

மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டோக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் ஏ.ஓ.எல் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் chat செய்யவும் முடியும். இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம். யுனிகோட் தமிழிலேயே chat செய்யவும் . மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும்.

இக் குறள் தமிழ்ச் செயலியுடன் கவிதை சொற்செயலி (Word Processor), சொற்பிழை திருத்தி (Spell Checker), பறவை மின்னஞ்சல் (Mail Client), குறியீட்டுமுறை(Encoding Converter) தென்றல் – பெயர்த்தகு செயலி, மற்றும் எழுத்துருவகை மாற்றிகள் (Font Converter), ஓசை – தமிழ் உரை ஒலி (Text-to-Speech) ஆகியவை ‏இணைந்துள்ளன.

ஆங்கில ஒலியியல் (Phonetic Keyboard) சார்ந்த விசைப்பலகையும், தமிழ்99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும், புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கணினியில் தமிழில் பயன்படுத்தப்படும் எந்த எழுத்துருவையும் அதாவது TSC / TAB/ TAM/ UNICODE / LIPI என எதனையும் பயன்படுத்தலாம்.

இதில் Text-to-speech – எனப்படும் டைப் செய்ததை வாசிக்கும் வசதியும் உள்ளது. “கவிதை” எனும் சொற்செயலியில் தமிழில் டைப் செய்து உரிய பட்டனில் க்ளிக் செய்தால் அதனை வாசித்துக் காட்டுகிறது தமிழில் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் எழுத்துப் பிழை திருத்தும் வசதியும் இதில் உள்ளது.

ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையி‎‎ன் மூலம் தமிழில் இலகுவாக டைப் செய்யலாம். அதாவது ஆங்கிலத்தில் “ammaa” என டைப் செய்ய தமிழில் “அம்மா” என டைப் ஆவதைக் காணலாம். ‏
குறலில் உள்ள ஏனைய வசதிகளாவன;

• எளிய நடையில் முற்றிலும் தமிழில் உதவி (Help) பெறலாம்.
• தமிழில் இன்றைய தேதி மற்றும் கிழமை.
• தமிழ் மற்றும் ஆங்கில பட்டியல் (Menu)
• தமிழ் மற்றும் ஆங்கில சொற்தேடல் (Find), சொல்மாற்றம் (Replace) செய்யும் வசதி.

30 நாள்களுக்கு முழுமையாக இயங்கும் இத்தொகுப்பு, உங்களின் தேவை களைப் பூர்த்திசெய்கிறதா எனச் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். அச்சோதனை காலத்திற்குப் பின் கட்டணம் செலுத்A உரிமம் பெறாவிட்டால் தானாகவே இத்தொகுப்பு இலவச பதிப்பாக மாறிவிடும்.

– அ‎னூப்

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *