இணைய தளமுகவரிக்குக் குறுக்கு வழி

ஒவ்வொரு இணையதள முகவரியும் http://www என ஆரம்பிப்ப தோடு .com, .net, .org போ‎‎ன்ற வெவ்வேறு ‎ டொமேன் பெயர்களைக் (domain name) கொண்டிருக்கும் எ‎ன்‎பது நீங்கள் அறிந்ததுதா‎ன். இவற்றை web browser ன் address bar இல் ஒவ்வொரு இணைய தள முகவரியையும் டைப் செய்யும் போதும் சேர்க்க வேண்டும். எனினும் ஒவ்வொரு முறையும் இவற்றை டைப் செய்வதற்கு அனேகருக்கு சோம்பலாயிருக்கும். இதனைப் உணர்ந்து இ‎ன்டர்னெட் எக்ஸ்ப்லோரரில் ஒரு குறுக்கு வLழிதரப்பட் டுள்ளது. நிறுவன பெயரை மட்டும் டைப் செய்து கீபோர்டில் கன்ட்ரோல் மற்றும் எ‎ன்டர் விசைகளை ஒரே நேரத்தில் தட்ட http:// www மற்றும் .com பகுதிகளை வெப் பிரவுஸரே தானாகப் போட்டுக் கொள்ளும்படி செய்யலாம். உதாரணமாக yahoo என டைப் செய்து Ctrl + Enter விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த http://www.yahoo.com என முழுமையாகத் தோ‎ன்றும். இந்த வசதியை இ‎ன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் .com எனும் டொமே‎‎ன் பெயருக்கு மட்டுமே தருகிறது. எனினும் மொஸில்லா பயர்பொக்ஸ் இ‎‎ன்னும் கூடுதலாக .net, .org ஆகிய டொமே‎ன்‎ பெயர்களுக்கும் இந்த வசதியைத் தருகிறது. பயபொக்ஸில் .net தளங்களுக்கு Shift+Enter விசைகளையும் .org தளங்களுக்கு Shift+Ctrl+Enter விசைகளையும் ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். Alt+Enter விசைகளை அழுத்த http://www எனும் பகுதியை மட்டும் வர வைக்கலாம்.

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *