Floppy Disk, Hard Disk, Zip Disk என்பவற்றில் டிஸ்க் எனும் வார்த்தையின் இறுதியில் “K” எழுத்து பயன்படுத்தப்பட்டிருப்பதையும் மாறாக Compact Disc (CD), DVD, BD என்பவற்றில் வரும் டிஸ்க் எனும் வார்த்த்தையின் இறுதியில் “C” எழுத்து பயன்படுத்தப்படுவதையும் அவதானித்திருப்பீர்கள். என்னஎல்லா ஊடகங்களிலும் ஒரு வட்ட வடிவிலான ஒரு தட்டே பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் அவற்றைக் குறிக்கப் பயன்படும் சொற்களில் மட்டும் ஏன் இந்த வேறுபாடு? பெரிதாக ஒன்றும் இல்லை. அவற்றில் பயன் படுத்தும் தொழில் நுட்பத்தைக் கொண்டே இவ்வாறு வேறுபடுத்துகிறார்கள். அதாவது காந்தப் புலம் கொண்டு படிக்கும், பதியும் ஊடகங்ளைக் (Magnetic Media) குறிக்க Disk எனும் வார்த்தையும், ஒளிக் கதிர் கொண்டு படிக்கும், பதியும் (Optical Media) ஊடகங்களை Disc எனும் வார்த்தை கொண்டும் வேறு படுத்துகிறார்கள். தவிர Disk மற்றும் Disc எனும் வர்த்தைகளின் பொருளும் ஒன்றே. உசசரிக்கும் விதமும் ஒன்றே.
Check Also
Microsoft Officially Released Windows 11
Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …