How to restrict friends from seeing what you share on Facebook

How to restrict friends from seeing what you share on Facebook முக நூலில் நண்பர்களை ஓரங்கட்டுவது எப்படி? முக நூலில் நீங்கள் இடும் பதிவுகளை உங்கள் நட்புப் பட்டியலில்  உள்ள குறிப்பிட்ட  சில நண்பர்கள் பார்க்காமல் தடுக்கக் கூடிய வசதியும் உள்ளது என்பதை அறிவீர்களா? முக நூலில் இது புதிதாக அறிமுகமான அம்சமல்ல. இது ஏற்கனவே இருக்கும் வசதிதான். ஆனால் பல பேர் இதனைப் பயன் படுத்துவதில்லை.


How to restrict friends from seeing what you share on Facebook

நான் கூட சில சங்கடங்களைத் தவிர்ப்பதற்காக சிலரை அப்படி ஓரம் கட்டி வைத்திருந்ததுண்டு. அதே போல் நண்பர் XYZ அவர்களின் பதிவுகள் சில மாதங்களாக எனக்குக் காண்பிக்கப்படுவதில்லை. அவர் கூட என்னை என்னை ஓரம் கட்டியிருப்பதாகத் தெரிகிறது

இதனைப் பயன் படுத்துவதற்கு நீங்கள் புதிதாக ஸ்டேட்டஸ் போட ஆரம்பிக்கும்  இடத்தில் உங்கள்  ஸ்டேட்டஸ் என ஏதாவது டைப் செய்து விட்டு Public  அல்லது Friends என காட்டிக் கொண்டிருக்கும் பட்டனில் உள்ள கீழ் நோக்கிய அம்புக்  குறியில் (down arrow)  க்ளிக் செய்ய ஒரு சிறிய மெனு தோன்றும் அந்த மெனுவில் Friends except என்பதைக் க்ளிக் செய்ய வரும் உங்கள் நட்புப் பட்டியலில்  இருந்து நீங்கள் விரும்பாத நண்பரின்  பெயருக்கு எதிரே உள்ள பட்டனில் க்ளிக் செய்து Save Changes க்ளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான். இதற்கு  வேறு வழிகளும் உண்டு. 

இந்த வசதி மூலம் உங்கள் பதிவுகளை நண்பர் பார்க்காமல் தடுத்தாலும் அவரது பதிவுகள் உங்களை வந்தடையும் என்பதையும் நினைவில் கொள்க

tamiltech.lk

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *