ஒடேசிட்டி என்பது ஒலிப்பதிவு செய்யவும் ஒலிக் கோப்புகளை (sound files) எடிட் செய்யவும் என உருவாக்கப்பட்டுள்ள் ஒரு ஓபனசோர்ஸ் மென்பொருளாகும்.
இம் மென்பொருள் Dominic Mazzoni என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது கூகில் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் ஒடேசிட்டி மென் பொருளை உலகெங்குமுள்ள பல தன் ஆர்வளர்களுடன் இணைந்து பேணி வருகிறார்.
ஒடேசிட்டி மூலம் ஒலிப்பதிவு செய்வது மட்டுமன்றி பல்வேறு ஒலி சார்ந்த செயற்பாடுகளை செய்யக் கூடியதாகவிருப்பதுடன் அதனை எவரும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடியவாறு ஒரு எளிமையயன இடை முகப்பையும் கொண்டுள்ளது. வர்ததக நோக்கில் வெளியிடப்படும் ஒலிப்பதிவு செய்யும் மென்பொருள்களை விட தரம் மிக்கதாக ஒடேசிட்டி விளங்கிகுகிறது.ஒடேசிட்டி மென்பொருளின் சிறப்பம்சங்கள் சில
ஒலிப்பதிவு செய்தல மற்றும் ஒலிக் கோப்புகளை இயக்கிப் பார்த்தல். (மைக் மூலம் மட்டுமல்லமால் கணினி ஸ்பீக்கரில் ஒலிக்கும் பாடல்களையும் பதிவு செய்து கொள்ள்லாம்.)
WAV, AIFF, MP3, Ogg Vorbis போன்ற பல விதமான ஒலிக் கோப்புகளைக் கையாள முடியும். எனினும் MP3 பைல்களைக் கையாள LAME encoder ஐ இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஒலிக் கோப்பை பகுதி பகுதிகளாக வெட்டி (cut / paste, copy/paste) பின்னர் அவற்றைப் பிரதி செய்து அதனை வெவ்வேறு இடங்களில் ஒட்டிக் கொள்ள முடியும்.
ஒலிக் கலவை செய்தல்
ஒலிக் கோப்புகளுக்கு வெவ்வேறு விதமான டிஜிட்டல் இபெக்டுகளைப் பிரயோகித்தல்
ஒலிக்கோப்பிலுள்ள இரைச்சல்களை நீக்குதல்
பாடல்களில் இசையை வேறாகவும் குரலை வேறாகவும் பிரித்தல்
கேசட் நாடாவிலுள்ள பாடல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுதல் போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது.
தற்போது ஒடேசிட்டி மென்பொருளின் 1.3.7 எனும் பதிப்பு வெளியிடப்பட் டுள்ளது. இதனை Windows, Mac , மற்றும் Unix போன்ற பல்வேறு இயங்கு தளங்களில் நிறுவ முடியும்.
ஒடேசிட்டி மென்பொருளை http://audacity.sourceforge.net இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள்லாம்.