What is the IMEI Number on your mobile phone?

What is the IMEI Number on your mobile phone? நீங்கள் பயன்படுத்தும் எந்தவகை மொபைல் ஃபோனும் IMEI (’இமி’ நம்பர் என்ற சொற் பிரயோகத்தை நீங்கள்கேட்டிருக்கலாம்) எனும் ஓர் இலக்கத்தைக் கொண்டிருக்கிறது. IMEI என்பது International Mobile Equipment Identity (சர்வதேச மொபைல் சாதனஅடையாள எண்) என்பதன்சுருக்கமே. ஒரு செல்லுலார் நெட்வொர்க்குடன் இணையும் ஒவ்வொரு மொபைல் சாதனமும் ஒரு தனித்துவமான IMEI எண்ணைக்கொண்டிருக்கும். இதில் சாதாரண செல்போன்கள், ஸ்மார்ட் போன்கள், செல்லுலார்-வசதிகொண்ட டேப்லட் கணினிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் செல்லுலார் டேட்டாவை ஆதரிக்கும் அனைத்து சாதனங்களும் அடங்கும்.

IMEI இலக்கம் ஒரு மொபைல் சாதனத்தைத் தனியாக அடையாளப்படுத்துகிறது. இந்த இலக்கம் சிம் (SIM – Subscriber Identification Module) அட்டையில் காணப்படும் இலக்கத்திலிருந்து வேறுபட்டது.  சிம் அட்டையானது பயனரை அடையாளம் காணவும் அவரது கணக்கை நிர்வகிக்கவும், வழங்கப்படும் சேவைகளைக் கட்டுப் படுத்தவுமென வழங்கப்படுகிறது. சிம் அட்டை நிரந்தரமானதல்ல. இது சாதனத்திலிருந்து நீக்கக்கூடியது என்பதை நீங்கள் அறிவீர்கள். மொபைல் பழுதடையும்போது அதே சிம் அட்டையை வேறொரு மொபைல் சாதனத்திலும் கூடப் பயன் படுத்த முடியும்.

What is the IMEI Number on your mobile phone?

IMEI இலக்கமானதுஒரு குறிப்பிட்ட மொபைல் சாதனத்தைக் கண்காணிக்க அல்லது கண்டுபிடிக்கப் பயன்படுகிறது, இது எந்த நிறுவன சிம் அட்டையை மொபைல் சாதனத்தில் இட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாது IMEI இலக்கத்தின் மூலம் அந்த மொபைல் சாதனம் இருக்குமிடத்தைக் கண்டறியலாம்.  உதாரணமாக, உங்கள் தொலைபேசி திருடப்பட்டாலோ, சிம் கார்டு மாற்றப்பட்டாலோ, உங்கள் மொபைல் வழங்குநர் இன்னமும் திருடப்பட்ட தொலைபேசியை IMEI ஐ பயன்படுத்தி அணுக முடியும்.

IMEI இலக்கம் மற்றும் தொடரிலக்கம் (Serial Number) இடையே என்ன வேறுபாடு?

ஒரு IMEI இலக்கமானது ஒரு தொடர் இலக்கம் (Serial Number) போன்றதுதான். அது வன்பொருள் சாதனத்துக்கென வழங்கப்படும் ஒரு தனித்துவமான எண்ணாகும். மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களை மேற்பார்வை செய்யும் ஒரு சர்வதேச நிறுவனமான GSMA (GroupeSpéciale Mobile Association), எனும் சர்வதேச நிறுவனத்தால் இவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மொபைல் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் IMEI இலக்கங்களைப் பல்வேறு இலக்க வீச்சுக்களில்  GSMA வழங்குகிறது

IMEI இலக்கம் போன்று மொபைல் சாதனத்தைத் தயாரிக்கும் நிறுவனமும் ஒருதொடர் இலக்கத்தை (Serial Number) அந்த மொபைல் சாதனத்தில் பத்தித்திருப்பதைக் காணலாம். மொபைல் தயாரிப்பாளர்களினால் வழங்கப்படும் தொடரிலக்கத்திற்கு எந்தவொரு ஒழுங்கு முறையையும் அவர்கள் பின்பற்ற முடியும்.

தொடரிலக்கத்திற்கான நீளம் அவை கொண்டிருக்கும் எண்கள் மற்றும் எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தொடர் எண்களுக்காக தங்கள் சொந்த நடைமுறையை தேர்வு செய்யலாம்.எனினும்IMEI எண்கள் எப்போதும் 15 இலக்கங்கள் கொண்டதாக இருக்கும்,

IMEISV (IMEIS  software version- மென்பொருள் பதிப்புஎன IMEI இன் மற்றுமொரு பதிப்பும் உண்டு. ,சாதனத்தின் நிறுவப்பட்டுள்ள மென்பொருளின் பதிப்பின் 14 இலக்க எண்ணையும் மேலும் இரண்டு இலக்கங்களையும் கொண்டுள்ளது. சாதனத்தின் மென்பொருள் மேம்பாட்டிற்குப் பிறகு IMEISV மாற்றமுறும்.

அண்ட்ராயிட் ஸ்மாட் போன்களில் IMEI இலக்கத்தை Settings  ஊடாக  About Phone பகுதியில் சென்று பார்வையிட முடியும். மொபைல்போன் விசைப்பலகையில்  *#06# ஐ என டைப்செய்தும் IMEI இலக்கத்தைப்பார்வையிடலாம்.

What is the IMEI Number on your mobile phone?

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *