அலுவலகக் கணினியை வீட்டிலிருந்தே இயக்க Team Viewer

விண்டோஸில் இணைந்து வரும் ரீமோட் டெஸ்க்டொப் (Remote Desktop)அறிந்திருப்பீர்கள்.. ஐடி வலத்திலும் இது பற்றி முன்னர் எழுதியதாக ஞாபகம்., அதாவது வீட்டிலிருந்து கொண்டே உங்கள் கா
ரியாலயக் கணினியுடன் இணைந்து அக்கணினியிலுள்ள ஹாட் ட்ரைவ், பைல், போல்டர் மற்றும் ஏனைய புரோக்ரம்களை திறந்து பணியாற்ற முடிவதோடு நிஜமாகவே உங்கள் காரியாலயக் கணினி முன்னால் உட்கார்ந்து பணியாற்றுவது போன்ற உணர்வை
இந்த ரீமோட் டெஸ்க்டொப் தருகிறது.
தொலைவிலுள்ள கணினியை அணுகுவதற்குப் பயன்படும் ரீமோட் டெஸ்க்டொப் போன்ற மற்றுமொரு மென்பொருள் கருவியே டீம் வீவர். (TeamViewer) இது விண்டோஸ் ரீமோட் டெஸ்க்டொப்பை விட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது
.
டீம் வீவர் மூலம் ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகலாம்.
உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பை மறு
முனையில் இருப்பவருக்கும் அதேபோல் அவரது கணினியின் டெஸ்க்டொப்பை உங்கள் கணினிலும்
தோன்றச் செய்யலாம்.. இதன் மூலம் கணப்பொழுதில் படங்களையோ அல்லது பிரசன்டேசன் ஒன்றையோ தொலைவிலுள்ளவருக்குக் காண்பிக்க முடியும்.
தொலைவிலுள்ளநண்பரைக் கொண்டு உங்கள்கணினியில் ஏற்பட்டுள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள் சிக்கலைஅவரிடத்திற்கு நேரில் செல்லாமல் உங்கள் வீட்டிலிருந்தபடியே சரி செய்து கொள்ளலாம்.
அதிக கொள்ளளவு கொண்ட பைல்களை இ

லகுவாகவும் விரைவாகவும் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. இது போன்ற ஏராளமான தேவைகளுக்கு துணை புரிகிறது. ரீமோட் கண்ட்ரோல் மென்பொருள் கருவியான டீம் வீவர்
விண்டோஸ்ரீமோட்டெஸ்க்டொப்வசதியைப்பயன்படுத்தஇரண்டுகணினிகளிலும்பல்வேறுவிதமனசெட்டிங்ஸ்மாற்றியமைக்கவேண்டும். . எனினும்டீம்வீவரைமிகஎளிதாகஎவரும்பயன்படுத்தலாம். எந்தவிதமானமாற்றங்களும்கணினியில் செய்யாமல்டீம் வீவரை நிறுவியதுமேபயன்படுத்தஆரம்பிக்கலாம். வேறு போட் இலக்கமோ(Port)ஐபி முகவரிகளோ வழங்க வேண்டியதில்லை..
டீம்வீவர் மென்பொருளை பயன் படுத்த இரண்டு முனைகளிலும் டீம்வீவரை நிறுவி இயக்க வேண்டும். அப்போது உங்கள் கணினிக்கென ஒரு இலக்கமும் கடவுச் சொல்லும் தரப்படும். எதிர் முனையிலும் அவ்வாறே தரப்படும். இந்த லொகின் விவரங்களை இரண்டு கணினிகளிலும் பரிமாறிக் கொண்ட பின் இனைப்பை உருவாக்கி நீங்கள் விரும்பும் வசதியை செயற்படுத்த முடியும்.
டீம் வீவர் மென்[பொருள் கருவியை தனிப்பட்ட பாவனைக்குஇலவசமாகப் பயன் படுத்தலாம். எனினும் வணிக நோக்கில் பயன் படுத்துவோர் அதற்குத்கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதன் மூலம் டீம் வீவரின் பிற சேவைகளையும் பெறலாம். குறிப்பாக பைல் பரிமாற்றம்.,பல பேருடம் குழுவாக இணைந்து ஓன் லைனில் பணியாற்றல், ஓடியோ மற்றும் வீடியோ செட் போன்ற சேவைகளைப் பெறலாம். .
TeamViewer 6 எனும் புதிய பதிப்பு பல வசதிகளைக் கொண்டுள்ளது. 2.9 எம்பி அளவு கொண்ட இதனை www.teamviewer.comஎனும் இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்
டீம் வீவரைப் பயன் படுத்தி எங்கோ ஓரிடத்திலிருந்து கொண்டு உங்கள் வீட்டுக் கணினியையோ அல்லது அலுவலகக் கணினியையோ அணுகி அதனை எமது கட்டுப் பாட்டில் இயக்கும் போது ஒரு புதுமையான அனுவத்தை உணர முடியும்
-அனூப்-

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

2 comments

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *