அக்குர – என்பது நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி ஒரு பாடசாலைச் சூழலைத் திறமையாகவும் வினைத் திறன் மிக்கதாகவும் நிர்வகிக்க வல்ல இணையம் சார்ந்த ஒரு பாடசாலை முகாமைத்துவ மென்பொருளாகும். (School Management System ). இது இலங்கையின். அரச மற்றும் தனியார் பாடசாலைகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. இம்மென்பொருள் பாடசாலைக் கல்வியை மேம் படுத்தும் நோக்கில் பாடசாலை நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள், மற்றும் பெற்றோர்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு தளமாக அக்குர மென்பொருள் உருவக்கப் பட்டுள்ளது.
ஒரு பாடசாலையின் நாளாந்த நடவடிக்கைகளான மாணவர்களின் வரவு பதிதல், மாணவர்களின் கல்வி மற்றும் இணைப் பாட விதான நடவடிக்கைகளை அவதானித்தல், முன்னேற்ற அறிக்கைகள் உருவாக்குதல் போன்ற ஏராள்மான விடயங்கள் அக்குர மென்பொருளில் உள்ளடக்கப் ப்பட்டுள்ளன்.
ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனினதும் கல்வி விருத்தியை அவதானிக்கக் கூடிய அதே வேளை அதிபர் ஒவ்வொரு வகுப்பு மற்றும் தரங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கக் கூடியதாக இது உருவாக்கப் பட்டுள்ளது.
ஆசிரியர்கள், அதிபர்கள் மாத்திரமன்றி பெற்றார்களும் வீட்டிலிருந்தவாறே இணையம மூலம் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை அவதானிக்கக் கூடிய வசதியையும் அக்குர தருகிறது.
மேலும் பெற்றார் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான தொடர்பாடல் அரிதாக இடம் பெறும் இக்கால கட்டத்தில், பெற்றார் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான உறவைப் பேணுவதில் அக்குர மென்பொருள் ஒரு பாலமாக அமைவதுடன் மாணவர்களின் கல்வி விருத்திக்கு ஒரு அளப் பரிய சேவையை வழங்குகிறது. இலங்கையின் பல பிரபல பாடசாலைகளில் தற்போது அக்குர மென்பொருள் நிறுவப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகிற்து
மேலும் அக்குர என்பது ஒரு இணையம் சார்ந்த மென்பொருளாயிருப்பதனால் அதனை உலகின் எப்பாகத்திலிருந்தும் எந்நேரத்திலும் அணுகக் கூடியதாயிருப்பது அதன் சிறப்பம்சமாகும்.
அக்குர மென்பொருளை ஐக்கிய அமெரிக்க நாட்டில் தலைமையகத்தைக் கொண்ட Virtusa எனும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் இலங்கைப் பிரிவினரால் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் உருவாக்கத்தில் நம் நாட்டு இளைஞ்ர்களே முழுமையாகப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள என்பது குறிப்பிடத் தக்க விடயமாகும்.
மேலும் இவ்வாறான ஒரு மென்பொருளைக் கொள்வனவு செய்ய இலங்கை நாணயத்தில் சுமார் ஒரு இலட்சம் ரூபா வரையில் செலவு செய்ய நேரிடும். எனினும் Virtusa நிறுவனம் இதனை அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு இலவசமாகவே வழங்குகிறது. அதாவது இதனை மேலும் மேன்படுத்தும் நோக்கில் ஒரு இலவச திறந்த மூல் மென்பொருளாக (Free Open Source Software) வடிவமைத்துள்ளது 33.3 MB பைல் அளவு கொண்ட இம்மென்பொருளை http://akuraschools.org எனும் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.