ட்ரொப் பொக்ஸ் (Dropbox) என்பது இணையம் சார்ந்த (Online) ஒரு பைல் சேமிப்பு சேவையாகும், இந்த சேவை மூலம் பைல் மற்றும் போல்டர்களை இணைய வெளியில் பாதுகாப்பாக தேக்கி வைக்க முடிவதுடன் தேவை யேற்படும் போது அவற்றைப் மறுபடியும் பெற்றுக் கொள்ளவும் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. உங்களது முக்கிய ஆவணங்கள், படங்கள் வீடியோ போன்றவற்றை இனி பென் ட்ரைவ், சீடி, டீவிடியிலிட்டு கையிலெடுத்துச் செல்ல வேண்டாம். அவற்றை ட்ரொப் பொக்ஸில் சேமித்து விடுவதன் மூலம் எங்கிருந்தும் விரும்பிய நேரத்தில் அணுகி பெற்றுக் கொள்ள முடியும்.
தற்போது பிரபல்யம் பெற்றுவரும் ட்ரொப்பொக்ஸ் எனும் இந்த பைல் சேமிப்பு சேவையை இலவசமாகவோ அல்லது கட்டணம் செலுத்தியோ பயன் படுத்தலாம். இலவச சேவை மூலம் 2 GB அளவவிலான் இடத்தை ட்ரொப் பொக்ஸ் வழங்குகிறது. எனினும் கட்டணம் செலுத்துவதன் மூ;லம் இந்த அள்வை மேலும் அதிகரித்துக் கொள்ள முடிவதோடு இன்னும் பல வசதிகளையும் பெற்றுக் கொள்லலாம். ட்ரொப் பொக்ஸை சேவையை உங்கள நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் 8 GB அளவிலான சேமிப்பிடத்தையும் பெற்றுக் கொள்ளவும் முடியும். .
இணையம் சார்ந்த ஓன்லைன் பைல் சேமிப்பு சேவையை வழங்கும் Windows Live SkyDrive, Ubuntu One, SugarSync, ZumoDrive, Wuala போன்ற பிற நிறுவன சேவைகளுடன் ஒப்பிடும்போது ட்ரொப் பொக்ஸ் ஏராளமான வசதிகளைத் தருகிறது.
ட்ரொப் பொக்ஸை பயன் படுத்துவது மிக எளிதான ஒரு விடயமமும் கூட. இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பிறகு ஒரு Dropbox கணக்கொன்றை Dropbox இணைய தளத்திலிருந்து உருவாக்கிக் கொள்ள் வேண்டும். அதனை நிறுவியதும் மை டொகுயுமண்ட்ஸ் போல்டரில் Dropbox எனும் பெயரில் ஒரு போல்டர் உருவாகி விடும். அந்த போல்டரை சாதாரண ஒரு போல்டர் போல் பயன் படுத்தலாம். அந்த போல்டரினுள் பைல்களை வழமையான முறையில் சேமிக்கவும் பைல் மற்றும் பிற போல்டர்களை கொப்பி பேஸ்ட் செய்து விடவும் முடியும். பைல்களை ட்ரேக் அண்ட் ட்ரொப் முறையில் பைல்களை இழுத்துப் போடலாம் நீங்கள்: விரும்பியபடி சப் போல்டர்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த போல்டர், Dropbox சேர்வரிலுள்ள போல்டர்களையே சுட்டிக் காட்டுகின்றன. அதனுள் சேமிக்கப்படும் பைல் போல்டர்கள் நீங்கள் இணையத்தில் இணைந்திருப்பின் உங்களைக் கெட்காமலேயே அப்லோட் செய்யப்பட்டு விடும். அதிலுள்ள பைல் ஒன்றைத் திறந்து பார்க்கும்போது உங்கள் கணினியிலுள்ள பைல் ஒன்றைத் திறப்பது போன்ற அனுபவத்தைப் பெறலாம். ட்ரொப் பொக்ஸிலுள்ள பப்லிக் எனும் போல்டரில் இடப்படும் பைல்களை நீங்கள் குறிப்பிடும் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
இணையத்தில் இணையாமலேயே அதனுள் சப் போல்டர்களை உருவாக்க லாம். பைல்களைச் சேமிக்கலாம். இணையத்தில் இணைந்ததுமே உங்கள் கணினியிலுள்ள Dropbox போல்டர் சேர்வரிலுள்ள உங்கள் கணக்குக்குரிய போல்டருடன் (synchronize) சமப்படுத்தப்படும்.
ட்ரொப் பொக்ஸ் மென்பொருள் நிறுவாத கணினிகளிருந்தும் ட்ரொப் பொக்ஸ் போல்டர்களை dropbox.com இணைய தளத்தின் மூலம் உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்டுடன் அணுகலாம்.
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருக்கும் பட்சத்தில் அவை ஒவ்வொன்றிலும் Dropbox மென்பொருளை நிறுவி ஒரு கணினியிலுள்ள ட்ரொப் பொக்ஸ் போடட்ரில் பைல்களைப் புதிதாக சேர்க்கும் போது ஏனைய கணினிகளில் ஒரு செய்திப் பெட்டி தோன்றி இது பற்றி அறியத் தரும்.
தற்போது பயன் பாட்டிலுள்ள ஐபோன். என்ட்ரொயிட் போன்ற ஸ்மாட் போன்களுக்கெனவும் கூட Dropbox எப்லிகேசன் உருவாக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு ஏராளமான வசதிகளை ட்ரொப்பொக்ஸ் தருகிறது. இதனை Windows, Mac OS X, Linux என பல்வேறு இயங்கு தளங்களில் பயன்படுத்தவும் முடியும்.இந்த மென்பொருள் கருவியை www.dropbox.com எனும் தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கணினியில் நிறுவி அதன் வசதியை இன்றே பயன் படுத்த தயாராகுங்கள்.
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil

