What is NFT?

அண்மைக் காலங்கங்களில் NFT பற்றி அடிக்கடி செய்திகளைக் காணக் கிடைக்கிறது.

NFT கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் கேள்விப் படுகிறோம்.

பலரும் NFT பற்றி யூடியூபில் விளக்கங்கள் அளித்து வருவதைப் பார்த்து வருகிறோம்.

NFT பற்றி நான் அறிந்து கொண்டவற்றையும் என் பங்கிற்கு சொல்லி வைக்கலாமென நினைக்கிறேன்.

Non-Fungible Token என்பதன் சுருக்கமே NFT எனப்படுகிறது.

NFT என்பது ஒரு டிஜிட்டல் சொத்து,

அதாவது அந்த சொத்து ஒருவர் வாங்கக்கூடிய படம் அல்லது வீடியோவாக இருக்கலாம்.

Fungible என்பது அதே போன்ற இன்னொன்றால் மாற்றக் கூடியது அல்லது உருவாக்கக் கூடியது எனப் பொருள்படும்

ஆனால் Non-Fungible” என்பது மாற்றவோ அல்லது மறு விநியோகம் செய்யவோ முடியாதது எனப் பொருள் படும்.

ஒவ்வொரு NFTயும் தனித்துவமானது,

பொதுவான NFTகளில் டிஜிட்டல் புகைப்படங்கள், கலைப்படைப்புகள், அனிமேஷன்கள் மற்றும் சேகரிக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள் போன்றன அடங்கும்.

எனினும் pixabay போன்ற தளங்களில் ஆன்லைனில் பலரும் வாங்கக்கூடிய புகைப்படம், வீடியோ போலல்லாமல், இந்த NFT ஐ ஒரு நபர் மாத்திரமே வைத்திருக்க முடியும்.

NFTயை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

ஆனால் பெரும்பாலானவை பிரபலங்கள் மற்றும் பலராலும் அறியப்பட்ட சினிமா நடிகர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரால் தயாரிக்கப்பட்டு NFT யாக விற்பனை செய்யப்படுகின்றன.

ஒருவர் NFT ஐ வாங்கும்போது, ​​சொத்தின் அதிகாரப்பூர்வ உரிமை வாங்கியவரையே சேரும்.

படங்கள், வீடியோ போன்ற டிஜிட்டல் மீடியாவை எளிதாக எவராலும் நகலெடுக்க முடியும் என்றாலும்,

NFTயின் மதிப்பு அதன் உரிமை உரிமையாகும். அதாவது காப்புரிமை போன்றது.

டிஜிட்டல் வடிவில் உள்ள NFT சொத்துக்களை யாரும் பார்வையிடவும் முடியும்.

ஆனால் பொது வெளியில் பயன்படுத்த முடியாது.

பயன் படுத்த வேண்டுமாயின் அதன் உரியாமையாளருக்குப் பணம் செலுத்த வேண்டும்.

NFT உரிமங்கள் Bitcoin பரிவர்த்தனை பதிவைப் போலவே பிளாக்செயினில் (blockchain) சேமிக்கப்படுகின்றன.

பிளாக்செயின் என்பது பரிவர்த்தனைகளின் (transactions) டிஜிட்டல் பதிவு.

ஒவ்வொரு பதிவுக்குமுரிய பிலாக்ஸ் (blocks) எனப்படும் பகுதிகள் சங்கிலித் தொடர் போன்று ஒரே பட்டியலுடன் இணைக்கப்பட்டு பல்வேறு சர்வர்களில் என்கிரிப்ட் செய்யப்பட்ட வடிவத்தில் (encypt) சேமிக்கப்படிருக்கும்.

கிரிப்டோகரன்சிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கும் பிளாக்செயின்களே பயன்படுத்தப் படுகின்றன

அதே போன்று யாராவது ஒரு NFT ஐ வாங்கும்போது, ​​அந்தப் பரிவர்த்தனையும் பிளாக்செயினில் பதிவு செய்யப்படுகிறது.

மேலும் அந்த நபர் சொத்தின் பிரத்தியேக உரிமைகளைப் பெறுகிறார்.

About admin

Check Also

What is Discord and how to use it?

டிஸ்கார்ட்-Discord என்பது உரை அரட்டை-text chat, குரல் அரட்டை voice chat, வீடியோ அரட்டைvideo chat, மற்றும் கோப்பு பகிர்வு …