விரும்பிய இயங்கு தளத்தை பூட் செய்திட..



ஒரு கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவ முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வாறு இரண்டு இயங்கு தள்ங்கள் நிறுவப்பட்டுள்ள ஒரு கணினியில் நீங்கள் விரும்பும் இயங்கு தளத்தை இயல்பு நிலைக்கு (default) மாற்றிக் கொள்ளும் வசதி விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் உள்ளது. இதற்கு Boot.ini பைலில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது. அதற்கு நீங்கள் மை கம்பியூட்டர் ஐக்கனில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Advanced டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Startup and Recovery பகுதியின் கீழ் செட்டிங்ஸ் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இங்கு Time to display list of operating systems எனுமிடத்தில் டிபோல்ட் இயங்கு த்ளத்தை ஆரம்பிக்கு முன்னர் எவ்வளவு நேரம் இந்த அறிவித்தலைத் திரையில் காண்பிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்த நேர இடைவெளி செக்கனில் தரப்பட்டுள்ளது. இங்கு 0 முதல் 999 செக்கன் வரையில் நேரத்த்தை வழங்கலாம்.,

About admin

Check Also

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp வாட்சப்பில் ஏதோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *