விக்கி (wiki) என்பது இணைய பயனர்கள் தங்கள் இணைய உலாவியைப் பயன்படுத்தி ஒரு வலைத் தளத்தின உள்ளடக்கத்தை மாற்றவும் புதிதாக தகவல்களைச் சேர்க்கவும் அனுமதிக்கும் ஒரு வகை வலைத் தளம் ஆகும். வலை சேவையகத்தில் (web server) இயங்கும் விக்கி மென்பொருளால் இது சாத்தியமாகிறது பொதவாக விக்கி தளங்கள் தளத்தின் பயனர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படுகின்றன. விக்கி தளம் ஒன்றிற்கு மிகச் சிறந்த உதாரணமாக விக்கிபீடியா தளத்தைக் குறிப்பிடலாம். வுpக்கிபீடியா உலகின் பல்வேறு மொழிகளில் பதிப்பிக்கப்படும் ஒரு இலவச தகவல் களஞ்சியம் ஆகும். விக்கிபீடியா தளத்தில் எவரும் ஆக்கங்களத் திருத்தவோ புதிதாக சேர்க்கவோ முடியும்.
”விக்கி” என்ற வார்த்தை ஹவாய் மொழியில் பரவலாகப் பயன் படுத்தப்படும் ”விக்கி விக்கி” எனும் சொற்தொடரிலிருந்து உருவாகிறது. இது அதி வேகம் (super fast) என்பதைக் குறிக்கிறது. ”. ஏராளமான பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு தளத்தில் புதிதாக தகவல்களைச் சேர்ப்பதன் காரணமாக அந்த வலைத்தளம் மிக வேகமாக வளர்வதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதலாம்.