மைக்ரோஸொப்ட் நிறுவனம் தனி நபர் கணினிகளுக்கான தனது புதிய இயங்கு தளத்ததின் பீட்டா பதிப்பை (Beta Version) கடந்த வாரம் வெளியிட்டது. விண்டோஸ் 7 (Seven) எனப் பெயரிடப்பட்டிருகும் இந்த இயங்கு தளம் இது வரை வெளி வந்த விண்டோஸ் பதிப்புக்கள் அனைத்தையும் விட மேம்பட்டதாக இருக்கும் என மைக்ரோஸொப்ட் மார் தட்டிக் கொள்கிறது.பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்பபட்ட விண்டோஸின் முன்னைய பதிப்பான விஸ்டா கணினி பயனர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மாறாக அது மைக்ரோஸொப்ட் நிறுவனம் இதுவரை பெற்றிருந்த நற்பெயருக்கும் களங்கம் விளைவித்தது, எனவே விஸ்டாவினால் இழந்த பெயரை சரிசெய்வதற்காக புதிய ஒரு இயங்கு தளத்தை விரைவிலேயே வெளியிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு ஏறபட்டது.
இழந்த பெயரை மீட்டுக்கொள்ளவும் விண்டோஸுக்குப் போட்டியாக வந்திருக்கும் லினக்ஸின் துரித வளர்ச்சிக்கு ஈடு கொடுக்குமாறும் மேலதிக வசதிகளுடனும் உருவாக்கப் பட்டுள்ளது விண்டோஸ் 7.
விண்டோஸ் 7 பதிப்பிலுள்ள் சிறப்பம்சங்கள் தான் என்ன?
விண்டோஸ் 7 ல் டாஸ்க் பாரில் மாற்றங்கள் செய்யப்படுள்ளன. விண்டோஸில் முன்னைய பதிப்புகளில் டாஸ்க் பார் திறந்து வைத்துப் பணியாற்றும் எப்லிகேசன்களுக்கிடையில் இலகுவில் மாறிக் கொள்ள உதவியது. விண்டோஸ் 7 இல் நீங்கள் விரும்பும் எப்லிகேசன்களை விரும்பிய ஒழுங்கில் டாஸ்க் பாரில் வர வைக்கலாம்.. டாஸ்க் பாரில் உரிய ஐக்கனில் ஒரு முறை க்ளிக் செய்தாலே போதும். அடுத்த வினாடி எப்லிகேசனில் நீங்கள் பணியாற்றத் தயார். எப்லிகேசனை மாற்றுவதற்கு முன்னர் அதனை முழுமையான திரையில் ப்ரிவியூ செய்தும் பர்க்கலாம்.
ஜம்ப் லிஸ்ட் (Jump List) எனும் வசதி அடிக்கடி பயன்படுத்தும் பைல்கள் மற்றும் எப்லிகேசன்களை உங்கள் முன்னே காண்பிக்கும். டெஸ்க் டொப்பில் ஒரு ஐக்கன் மேல ரைட் க்ளிக் செய்ய இறுதியாகப் பணியாற்றிய பைலகளை காட்சிப்படுத்தும் உதாரணமாக எம்.எஸ். வர்ட் ஐக்கனில் ரைட் க்ளிக் செய்யும்போது இறுதியாகப் பணியாற்றிய பைல்களைக் காட்டும். அதேபோல் நீங்கள் விரும்பும் பைலை ஜம்ப் லிஸ்டில் சேர்க்கவும் முடியும்.
டெஸ்க்டொபில் திறந்திருக்கும் ஒரு விண்டோவில் பணியற்ற மேலும் பல வசதிகளைத் தருகிறது. விண்டோவைத் திறக்கவும், மூடவும், விண்டோ அளவினை மாற்றவும் ஒழுங்கு படுத்தவும் புதிய வழி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
டீவைஸ் ஸ்டேஜ் (Device Stage) எனும் புதிய வசதி மூலம் கணினியில் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர், ஸ்கேனர், கேமரா, செல்போன் போன்ற சாத்னங்களை நிர்வகிக்கலாம். டிவைஸ் ஸ்டேஜ் விண்டோவிலிருந்தே அந்த சாதனங்க்களின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள முடிவதோடு பொதுவான செயற்பாடுகளை ஒரே விண்டோவிலிருந்தே இயக்கலாம்.
முன்னைய பதிப்புகளில் வீட்டுக் கணினி வலையமைப்பை உருவாக்குவது சிறிது சிக்கலான விடயமாயிருந்த்து. தற்போது அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டு இலகுவாக விண்டோஸ் 7 ல் வீட்டு கணினி வலைய மைப்பை அமைத்துக் கொள்ளும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.. HomeGroup எனும் இந்த வசதி மூலம் ஏனைய கணினிகளுடன் இலகுவாகத இணைப்பை உருவாக்கி பைல் பரிமாற்றம் செய்து கொள்ள முடிவதோடு ப்ரிண்டர் போன்ற சாதனங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.
மை டொகுயுமெண்ட்ஸ் போல்டருக்குப் பதிலாக (Library) லைப்ரரி எனும் போல்டர் தரப்பட்டுள்ளது. இங்கு மை டொகுமெண்ட்ஸ் போன்றே ஆவ்ணங்கள், பாடல்கள், படங்கள் வீடியோ என்பவற்றை வகைப்படுத்தி சேமிக்கலாம்.
இனடர்நெட் எக்ஸ்ப்லோரரின் (8) பீட்டா பதிப்பும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் முகவரிப் பட்டை, தேடல் பகுதி, போன்ற வற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் தேடலை ஆரமிக்க தேடற் சொல்லை டைப் செய்ய ஆரம்பிக்கும்போதே தெரிவு செய்த தேடற் பொறி கொண்டு அதற்குரிய முடிவுகளைக் காட்டுகிறது. படங்கள் இருந்தால கூடவே படங்களையும் காட்டி விடுகிறது.
விஸ்டா பதிப்பிலிருந்த Windows Mail, Windows Calendar, Windows Movie Maker மற்றும் Windows Photo Gallery என்பன நீக்கப்பட்டுள்ளன. எனினும் விரும்பினால் அவற்றை Windows Live Essential மூலம் தனியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
குறலறியும் (speech recognition) தொழில் நுட்பம், கையெழுத்தை டெக்ஸ்டாக மாற்றும் (handwriting recognition) தொழில் நுட்பம் என்பன மேம்படுத்தப்பட்டுள்ளதோடு டச் ஸ்க்ரீன் (touch screen) எனும் தொடு திரைக்கு ஒத்திசையும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
கணினியயை பூட் செய்யவும் சட்டவுன் செய்யவும் குறைந்த அளவு நேரமே எடுத்துக் கொள்வது விண்டோஸ் 7 இயங்கு தளத்தின் குறிப்பிடத்த்கக்க சிறப்பம்சமாகும்.
இவ்வாறு மேலும் பல சிறப்ப்ம்சங்களை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. விண்டோஸ் 7 பீட்டா பதிப்பை மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆரம்பத்தில் 2.5 மில்லியன் பயனருக்கே இந்த வசதியை வழங்குவதாக அறிவித்த மைக்ரோஸொப்ட் நிறுவனம் அதனை டவுன்லோட் செய்து கொள்ள உலகெங்கிலிருந்தும் பலரும் ஆர்வம் காட்டியதை அடுத்து ஜனவரி மாதம் 24 ம் திகதி வரை எவரும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என பின்னர் அறிவித்துள்ளது..
இணையத்தில் இமேஜ் பைலாகக் கிடைக்கும் இந்த பீட்டா பதிப்பு 2.43 GB கொள்ளளவு கொண்டது. இதனை 512 Kbps வேகம் கொண்ட இணைய இணைப்பில் டவுன்லோட் செய்ய எனக்குப் 16 மணி நேரங்கள் எடுத்தது. இந்த இமேஜ் பைலை இமேஜ் ரெகோடர் வசதி கொண்ட ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி டீவிடியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்..
விண்டோஸ் 7 இயங்கு தளத்தின் முழுமையான பதிப்பை இவ்வாண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் எதிர்பார்க்கலாம்.
-அனூப்-
பயனுள்ள பதிவு. நன்றி