வந்தாச்சு கூகில் தமிழ் Voice typing 

இனி தமிழில் பேசியும் டைப் செய்யலாம்

உங்கள் எண்ட்ரொயிட் மொபைல் கருவிகளில் குரல் வழி டைப்பிங் (Voice typing)  வசதியை இனி தமிழிலும் பெறலாம். அதாவது தமிழில் டைப் செய்ய வேண்டிய தேவையேற்படும் போது கீபேடில் தட்டாமலே  நீங்கள் தமிழில் பேசியே டைப் செய்யலாம். உங்கள் பேச்சைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு டைப் செய்து விடுகிறது கூகிலின்  வொயிஸ் டைப்பிங் வசதி..

இந்த வொயிஸ் டைப்பிங் வசதி புதிய விடயமல்ல. ஆங்கிலம் மற்றும் சில ஐரோப்பிய மொழிகளுக்கு ஏற்கனவே கூகில் இந்த வசதியை அறிமுகப் படுத்தியிருந்தது. .கடந்த மாதம் தமிழுக்கும் வொயிஸ் டைப்பிங் வசதியை வழங்கியுள்ளது கூகில். தமிழ் மட்டு மல்லாது எமது சகோதர மொழியான சிங்களம் உட்பட இன்னும் சில இந்திய மொழிகளுக்கும் இந்த வசதியை கூகில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மொத்தமாக 120  உலக மொழிகளில் இந்த வசதியைப் பெறலாம்.

ஆனால் தமிழில் பேசும் போது நூறுய் வீதம் சரியாகவே டைப் செய்து விடும் என எதிர்பார்க்க முடியாது. உங்கள் மொபைல் கருவியின் மைக்ரோபோனின் செயற்திறன், மற்றும் நீங்கள் இருக்கும் இடத்தின் சூழல், நீங்கல் பேசும் விதம் போன்ற பல காரணிகளில் வொயிஸ் டைப்பிங் தங்கியுள்ளது.

வொயிஸ் டைப்பிங் வசதியைப் பெற உங்கல் எண்ட்ரொயிட் கருவியில் ஜிபோர்ட் (GBoard – Googkle keyboard) எனும் செயலியை ப்லே ஸ்டோரிலிருந்து நிறுவிக் கொள்ள வேண்டும்.

ஜீ-போர்டை நிறுவிய பின்னர் அதனை கட்டமைக்கப் பின் வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

முதலில் setting தெரிவு செய்யுங்கள் அங்கு language and Input என்பதைத் தெரிவு செய்து உங்கள் கீபோர்டாக GBoard என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது GBoard keyboard menu தோன்றும். அங்கு languages தெரிவு செய்து Use system language என்பதை முடக்கி (disable) விடுங்கள். அப்போது உள்ளீடு செய்யும் மொழியாக ஆங்கிலம் இயல்பு நிலைக்கு மாறும். அப்பகுதியில் கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்யும்போது தமிழ் மொழியையும் காணலாம். அங்கு Tamil (Sri lanka) என்பதைத் தெரிவு செய்து விட்டு  மறுபடி மேல் நோகி வந்து ஆங்கில மொழிய முடக்கி விடுங்கள்.  இப்போது தமிழ்மொழி மட்டுமே உள்ளீடு செய்யும் மொழியாக கட்டமைக்கப்பட்டிருக்கும். அடுத்து Gboard menu  இல் பின்னோக்கிச் சென்று Voice Typing  தெரிவு செய்யுங்கள். அங்கு Languages தெரிவு செய்யும் போது தோன்றும் பட்டியலில் மறுபடி தமிழ் (இலங்கை) என்பதைத் தெரிவு செய்து விடுங்கள்.

இப்போது உங்கள் கருவி தமிழில் குரல் வழி உள்ளீட்டை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டது. ஜீ-போர்டில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளையும் கட்டமைத்துக் கொள்ளலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இனி இந்த வசதியைப் பயன் படுத்தி கூகில் தேடல், யூடியூப், குறுந்தகவல், வட்ஸ்-ஏப், வைபர்  என எங்கும் டைப் செய்யக்கூடிய இடங்களில் குரல் வழி டைப்பிங்கைப் பயன் படுத்தலாம்.

அதற்கு Type a message / Enter message என  தோன்றும் இடங்களில் விரலால் தட்டி விட்டு (tap) கீபேடை வரவழைக்க வேண்டும். கீபேடில் வலது பக்க மேல் மூலையில் ஒரு சிறிய மைக் ஐக்கன் இருப்பதைக் காணலாம். அந்த மைக்கில் தட்டி நீங்கள் பேச ஆரம்பிக்கலாம்.

நீங்கள் தெளிவாகவும்  மெதுவாகவுப்  பேசும்போது சிறந்த வருவிளைவை எதிர் பார்க்கலாம்.

About admin

Check Also

What is Discord and how to use it?

டிஸ்கார்ட்-Discord என்பது உரை அரட்டை-text chat, குரல் அரட்டை voice chat, வீடியோ அரட்டைvideo chat, மற்றும் கோப்பு பகிர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *