மவுஸுக்கு வயது 44

நீங்கள் இந்தச் செய்தியை வாசிக்கும் சமயத்தில் உங்கள் கை அழுத்திக் கொண்டிருக்கும். மவுஸுக்கு இன்று 44 வயதாகிறது. உங்கள் கையைக் கொஞ்சம் விலக்கி மவுசுக்கு Happy Birthday to you!  சொல்லி விட்டு செய்தியைத் தொடருங்கள். 

உலகில் முதலாவது  மவுஸ்  44 வருடங்களுக்கு முன்னர் 1968 டிசம்பர் 8 ஆம் திகதி அறிமுகமானது.  மேற் புறம் மரக் கட்டையினால் வடிவமைக்கப் பட்டிருந்த அந்த மவுஸில் ஒரு சிவப்பு நிற பட்டன் மாத்திரம் இருந்தது. அதனைக் கணினியோடு இணைக்க நீண்ட ஒரு கேபலும் பின்புறம் இருந்தது. அது ஒரு சுண்டெலியின் தோற்றத்தைக் கொடுக்கவே அதற்கு மவுஸ் எனப் பெயரிட்டு விட்டர்ர்கள் அதனை வடிவ,மைத்த ஆராய்ச்சியாளர்கள்.

 1960 ஆ ஆன்டுகளில் மவுஸின் வடிவமைப்பாளரான Douglas Engelbart என்பவர் கணியுடன் தொடர்பாட்க் கூடிய ஒரு சாதனம் பற்றிய எண்ணக் கருவை கலிபோர்னியாவுவிலுள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன் முதலில் வெளியிட்டார்.

 1964 ஆம் ஆண்டில் அவரும் அவருடைய குழுவினரும் மவுஸின் மாதிரியொன்றை உருவாக்கினர். எனினும் அதற்குப் பின்னர் நான்கு வருடங்கள் கழித்தே அதாவது 1968 ஆம் ஆன்டில் தனது கண்டு பிடிப்பான மவுசைப் பற்றி ஒரு கணினிக் கருத்தரங்கில எடுத்துரைத்து மவுசை உலகிற்கு  அறிமுகப் படுத்தினார்.

 எனினும் உலக நாடுகள் பலவும் மவுசைப் பற்றி அறிந்து கொள்ள சுமார் 15 வருட காலங்கள் எடுத்துக் கொண்டன அதாவது 1980 ஆம் ஆண்டுகளின் பின்னரே பிற நாடுகள் அறிந்து கொள்கின்றன.

 வணிக நோக்கிலான முதலாவது மவுஸ் 1981 ஆம் ஆன்டு Xerox Star computer கணினியுடன் வெளியிடப்பட்டது. எனினும் Apple  நிறுவனத்தின் Apple Macintosh இயங்கு தளம் வெளியிடப் பட்ட பின்னரே மவுஸ் உலகளவில் பிரபல்யமடைந்தது.

 அன்று முதல் இன்று வரை மவுஸானது கணினிக்கு இன்றியமையாத உள்ளீட்டுச் சாதனமாக வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் தற்போது பிரபல்யமடைந்து வரும் தொடு திரைகளின் (touch screen) வருகை காரணமாக மவுஸ் இன்னும் சில வருடங்களில் பரணில் ஏறும் எனவும் எதிர் பார்க்கப் படுகிறது.

 

About admin

Check Also

Windows Sandbox வசதியை இயங்கச் செய்வது எப்படி?

விண்டோஸ் சாண்ட்பாக்ஸ் என்பது விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Virtual machine ஆகும். நாம் தினமும் கணினியை பயன்படுத்தும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *