பொது இடங்களிலுள்ள கணினியைப் பயன் படுத்துகிறீர்களா?


நீங்கள் சொந்தமாக கணினி, இணைய இணைப்பு வைத்திருந்தாலும் கூட சில வேளைகளில் இண்டர்நெட் மையம், நூல் நிலையம், விமான நிலையம். போன்ற பொது இடங்களில் காணப்படும் பலரின் பாவனைக்கென வைக்கப்பட்டிருக்கும் கணினிகளையும் பயன் படுத்தக் கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கும் வரலாம். இவ்வாறு பொது இடங்களிலுள்ள கணினிகளைப் பயன் படுத்தும்போது· மின்ன்ஞ்சல் கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட்
· பேஸ்புக் போன்ற தளங்களில் பயன் படுத்தக் கூடிய பயனர் பெயர் பாஸ்வர்ட்
· கடன் அட்டை விவரங்கள்
· அந்தரங்க தகவல்களைக் கொண்ட மின்னஞ்சல்கள்
· நீங்கள் பரிமாறிக் கொள்ளும் பைல்க்ள்
· நீங்கள் பார்க்கும் பார்க்கக் கூடாத தளங்களின் பெயர்கள்
போன்ற பல அந்தரங்க விடயங்களை இழக்க வேண்டி வரலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
.பொது இடங்களிலுள்ள கணினிக்ளில் எமது அந்தரங்க விடயங்களைப் பாதுகாப்பதற்கு யாரும் உத்தரவாதம் தருவதில்லை. அவ்விடங்களில் பணியாற்றும் கணினி நிர்வாகிகள் எமது அந்தரங்க தகவல்களையிட்டு கவலைப்படுவார் என நாம் எதிர் பார்க்க முடியாது. சில இடங்களில் எமது அந்தரங்க தகவல்களுக்குப் பாதுகாப்பு தரலாம் எனினும் பொதுக் கணினிகளில் எமது தகவல்கள் நூறு வீதம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுக் கணினிகளைப் பயன் படுத்தும்போது எவ்வவறு நாம் அவதானமாக நடந்து கொள்வது என்பதைக் கீழே பட்டியலிடுகிறேன். மேலே படியுங்கள். .
இணையத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தி விட்டு அந்த இணைய தளத்திலிருந்து முறையாக log out செய்து வெளியேறுங்கள். . பிரவுசர் விண்டோவை மூடிவிட்டால் அல்லது வேறொரு இணைய தள முகவரியை டைப் செய்து விட்டால் போதுமானது என நினைக்கக் கூடாது, முறையாக லொக்-அவுட் செய்யாமல் வெளியேறுவது உங்களுக்குப் பின்னர் கணினியைப் பயன் படுத்தும் நபரின் கையில் உங்கள் அந்தரங்க தகவல்கள் போய்ச் சேர்ந்து விட வாய்ப்புள்ளது. .


· பொதுக் கணினிகளில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேவைகளேற்படும் போது வழமையான உங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பாமல் அதற்கென தற்காலிகமாக ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்கி அனுப்பலாம். அல்லது பொதுக் கணினிகளில் மின்னஞ்சல் தேவை முடிந்தவுடன் உடனடியாக உங்கள் பாஸ்வர்டை மாற்றிக் கொள்ளுங்கள்.

வெப் மெயில் சேவைகளில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் இனஸ்டண்ட் மெஸ்செஞ்சர்களில் தானாகவே லொகின் செய்யும் வசதி உள்ளது. இவை எமது வசதிக்காகவே பயனர் கணக்கையும் பாஸ்வர்டையும் கணினியில் சேமித்து வைக்கும். எனவே இந்த வசதியை முடக்கி விடுங்கள்.
· பின்னஞ்சல் இணைப்புகளில் வரும் பைல்களை டவுன்லோட் செய்யும் போது அவற்றை உங்கள் பென் ட்ரைவில் சேமித்துக் கொள்ளுங்கள். டவுன்லோட் செய்த பைலை ஹாட் டிஸ்கில் சேமிப்பதானால் அதனை பென் ட்ரைவில் ஏற்றி விட்டு ஹாட் டிஸ்கிலிருந்து அநத பைலை அழித்து விடுவதோடு ரீசைக்கில் பின்னையும் காளி செய்து விடுங்கள்.
· டவுன் லோட் செய்த பைல்களை உங்கள் பென் ட்ரைவில் ஏற்றுமுன் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அவ்வாறே அதனை உங்கள் கணினியில் மறுபடி ஏற்று முன்னரும் வைரஸ் ஸ்கேன் செய்யுங்கள்.
· பொதுக் கணினிகளில் உங்கள் அந்தரங்க விடயங்களைக் கொண்ட பைல்களை படங்களை பரிமாறிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பொதுக் கணினிகளில் முக்கியமான தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சில திருடர்கள் நீங்கள் கீபோர்டில் அழுத்தும் ஒவ்வொரு கீயின் அசைவுகளையும் பதிவு செய்யக் கூடிய ‘keylogger’ மென்பொருள்களை நிறுவியிருக்கக் கூடும். இந்த மென்பொருள் பதிவு செய்யும் தகவல்களைத் திருடர்களுகு இமெயிலில் அனுப்பி விடும். நீங்கள் முக்கிய தகவல்க்ளை கணினியில் சேமிக்காது விட்டாலும், அவற்றை முறையாக அழித்தாலும் கூட உரிய தகவல்கள் திருடரின் கையில் போய் சேர்ந்து விடும்.

· சில இடங்களில் கணினிகளைக் கண்கானிப்பதற்கென பாதுகாப்புக் கேமராக்கள் பொருத்தியிருப்பர்கள். எனவே இந்த கேமராவின் பார்வையிலிருந்தும் உங்கள அந்தரங்க தகவல்களை மறைக்க மறந்து விடாதீர்கள். .

பொதுக் கணினிகளைப் பயன் படுத்தும்போது அருகில் நடமாடும் ஆசாமிகளை இட்டும் கவனமாயிருங்கள். அவர்கள் உங்கள் பின்புறமிருந்து தோளிற்கு மேலாக நீங்கள் அறியாமலேயே உங்கள் கணினித் திரையைப் நோட்டமிடலாம்.
· இணையத்தில் பொருட்கள் வாங்குதல் (Online Shopping), வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் (Online Banking) போன்ற செயற்பாடுகளுக்குப் பொதுக் கணினிகள் பொருத்தமானதல்ல. எனவே அக்கண்னிக்ளில் கிரடிட் காட் விவரங்களை வழங்காது தவிர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் முக்கியமான அந்தரங்க தகவல்களை கணினியில் டைப் செய்து விட்டு வேறு வேலையாக ஒரு போதும் எழுந்து செல்லாதீர்கள் இவ்வாறு நகர்ந்து செல்வதனால் அடுத்தவர்கள் உங்கள் அந்தரங்க தகவல்களைப் பார்ப்பதற்கு வசதியாக. அமைந்து விடும்.
· பிரவுஸரிலுள்ள ‘Auto complete’ வசதியானது எமது டைப்பிங் வேலைகளைக் குறைத்து விடக் கூடிய பயனுள்ள வசதி. எனினும் பொதுக் கணினிகளில் இநத் வசதியைப் பயன் படுத்துவது ஏற்ற செயலல்ல. இந்த வசதியை முடக்குவதற்கு இண்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் Tools மெனுவில் Internet Options. தெரிவு செய்யுங்கள் தோன்றும் டயலொக் பொக்ஸில் Content டேபில் AutoComplete பட்டனில் க்ளிக் செய்ய வரும் பெட்டியில் பாஸ்வர்ட் சம்பந்தப்பட்ட தெரிவுகளை நீக்கி விடுங்கள்.
· அதேபோல் உங்கள் இணைய பயன்பாட்டை பிரவுசர் Temporary Internet files எனும் போல்டரில் சேமித்து விடும்.. அவற்றை அழிப்பதற்க்கு இதே Internet Options டயலொக் பொக்ஸில் General டேபில் Temporary Internet files என்பதன் கீழ் Delete cookies, Delete Files பட்டன்களில் க்ளிக் செய்து விடுங்கள்.
பயபொக்ஸ் பிரவுஸரில் Tools > Options > Privacy க்ளிக் செய்யுங்கள். அங்கு Clear History When Firefox Closes என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள். இதன் மூலம் பய பொக்ஸ் பிரவுஸரில் உங்கள் இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் அழித்து விடலாம்.
பொதுக் கணினி பயன்பாட்டில் மேற்சொன்ன விடயங்களுக்கு மேலாக சமயோசித புத்தியும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடதீர்கள். சரி, இவ்வளவு விடயங்களைச் சொல்லி உங்களைப் பயமுறுத்திய நான் ஒருபோதும் பொதுக் கணினிகளைப் பாவிக்கும்போது எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுப்பதேயில்லை. ஏனென்றால் என்னிடம் திருடுவதற்கு எதுவுமேயில்லை.
-அனூப்-

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

3 comments

  1. கணினி பயனாளர்களுக்கு இது ஒரு தெரிந்த விஷயம் தான் என்றாலும், அதை மறுபடியும் நினைவூட்டும் படி அமைந்த பதிவு…

  2. all your posts are nice thanks for sharing. keep it up

  3. I want learn about IT from you. Thank you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *