பாஸ்வர்ட் மறந்து விட்டதா?

அடுத்தவர் கணினியில் நோட்டம் வ்ட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரை வில் ஏற்றிக் கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேறு எவரும் தங்கள் அனுமதியில்லாமல் கணினியைப் பயன்படுத்தாத வாறும் பயனர் கணக்குக்குப் பாஸ்வர்ட் வழங் கியிருப்பர் பலர். அவ்வாறு வழங்கிய பாஸ்வர்டை மறந்து விட்டு கணினியை உபயோக்க்க முடியாமல் தவிப்பார்கள் இன்னும் பலர். இந்தப் “பலர்”களுக்கு உபயோகமன ஒரு வ்ண்டோஸ் டிப்

விண்டோஸின் முன்னைய பதிப்புகள் போலன்றி எக்ஸ்பீ பதிப்பில் கட்டாயம் ஒரு பயனர் கணக்கை (User Account) உருவாக்கிய பிறகே கணினியை உபயோகிக்க வேண்டியுள் ளது. ஒன்றுக்கு மேல் பயனர் கணக்கை வைத்திருக்கும் போது ஒவ்வொருவரும் இந்தப் பயனர் கணக்கு மூலம் வெவ்வேறு செட்டிங்ஸ்ஸை கணினியில் பேணக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இந்த பயனர் கணக்கிலும், கணினியின் ஏக போக நிர்வாகி (Administrator) வரையறுக்கப்பட்ட பயனர் (limited user) என இரு வகைகளுண்டு. எட்மினிஸ்ட்ரேட்டர் என்பவருக்கு கணினியில் விரும்பிய மாற்றங்களைச் செய்ய முடியும். வரையறுக் கப்பட்ட பயனருக்கு எல்லா செட்டிங்ஸையும் மாற்ற உரிமையில்லை. அத்துடன் ஒவ்வொரு பயனரும் தங்கள் கணகிற்கு ஒரு பாஸ்வேர்டும் அளித்து தங்கள் செட்டிங் குகளை எவரும் மாற்றாத வண்ணம் பாதுகாப்பளிக்கவும் முடியும். இது தவிர விண்டோஸ் Administrator எனும் பெயரி லும் ஒரு யூசர் கணக்கு இயல்பாகவே உருவாக்கப்படும்.

ஆனால் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் இல்லாமலேயே அடுத்தவர்கள் உங்கள் கணினியைப் பயன் படுத்த முடியும். அது எப்படி சாத்தியம். அதாவது மேலே குறிப்பிட்ட எட்மினிஸ்ட்ரேட்டராக கணினிக்கு உள்ளே நுளைய முடியும்.

கயை இயக்கியதும் வரும் விண்டோஸ் வெல்கம் திரையில் விசைப்பலகையிலுள்ள Ctrl + Alt + Del ஆகிய விசைகள் மூன்றையும் இரண்டு தடவை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது வேறொரு log on திரை தோன்றும். அங்கு யூசர் பெயராக Administrator என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அவ்வளவுதான்! அடுத்த சில வினாடிகளில் நீங்கள் உள்ளே நுளைந்து விடலாம். இனியென்ன பாஸ்வர்ட் பாதுகப்பளித்த யார் கணினியையும் துலாவலாமே.

பாஸ்வர்ட் வழங்கப்பட்டுள்ள கணினியை இயக்க இன்னு மொரு வழியுமிருக்கிறது, பேசாமல் பாஸ்வர்ட் என்னவெண்று அந்த எட்மினிஸ்ட்ரேட்டரையே கேட்டுவிட வேண்டியதுதானே.

-அனூப்-

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *