தெரியுமா Network Drive ?


வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் வைத்திருப்பின் அவற்றை இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பயன் படுத்துவதன் மூலம் நீங்கள் பல வசதிகளைப் பெறலாம். அவற்றில் போல்டர்களை பகிர்ந்து கொள்வதன் (sharing) மூலம் இலகுவாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினுக்குப் பைல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
ஒரு கணினியில் போல்டர் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட பின்னர் அடுத்த கணினியிலிருந்து இரண்டு வழிகளில் அதனை அணுகலாம். முதல் வழி அந்த போல்டரை நேரடியாகத் திறந்து கொள்வதாகும். அதாவது My Network Places ஐகணை திறந்ததும் அங்கு பகிரப்பட்டுள்ள போல்டர்களை கான்பிக்கும். அதில். இருந்து நேரடியாகவே திறந்து கொள்ளலாம்.
இரண்டாவது வழி முறை நெட்வர்க் ட்ரைவ் மூலம் அந்த போல்டரை அணுகுவதாகும். அதாவது பகிரப்பட்டுள்ள ஒரு போல்டரை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தப் போகிறீர்களாயிருந்தால் அந்த போல்டரைக் குறிக்க வென ஒரு ட்ரைவ் லெட்டர் கொடுதது விட்டால் அதனை மை கம்பியூட் டர் ஐக்கனைத் திறப்பதன் மூலம் அணுகலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.
மை கம்பியூட்டர் அல்லது மை டொகுயுமெண்ட்ஸ் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Map Network Drive என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது படத்தில் உள்ளது போன்ற் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு Drive எனும் இடத்தில் விரும்பிய ஒரு ட்ரைவ் லெட்டரைத் த்ரிவு செய்யுங்கள்.. அடுத்து Folder எனுமிடத்தில் வேறொரு கணினியில் பகிரப்பட்டுள்ள போல்டருக்கான Path வழங்க வேண்டும். அதற்கு நீங்கள் பிரவுஸ் பட்டனில் க்ளிக் செய்து அதன் அமைவிடத்தைக் சுட்டிக் காட்டி விட்டு Finish பட்ட்னில் க்ளிக் செய்யுங்கள். இப்போது அந்த பகிரப்பட்ட போல்டரை மை கம்பியூடரைத் திறப்பதன் மூலம் அடையலாம்.
நெட்வர்க் ட்ரைவ் அவசியமில்லையெனின் அதே Tools மெனுவில் Disconnect Network Drive ட்ரைவ் என்பதைத் தெரிவு செய்ய்ங்கள். அல்லது மை கம்பியூட்டரைத் திறந்து உரிய நெட்வர்க் ட்ரைவின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்தும் இணைப்பை துண்டிக்கலாம்.

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *