இது என் போல்டர்…

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் ஒவ்வொருவரும் தங்களுக்கென பயனர் கணக்கு உருவாக்Bக் கணினியில் பணியாற்றுவர். இந்தப் பயனர் கணக்கு மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற செட்டிங்ஸைக் கணினியில் பேண முவதுடன் தங்களின் முக்கிய ஆவணங்களை அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்தும் மறைத்து விடலாம்.எனினும் பயனர் கணக்கு, பாஸ்வர்ட் என தீவிர பாதுகாப்பு வழங்கியிருந் தாலும் அடுத்தவர்கள் உங்கள் ஆவணங்களை அணுக வேறு வழிகளிருக் கின்றன. விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் ட்ரைவி லுள்ள Documents and settings போல்டரைத் திறப்பதன் மூலம் உங்கள் ஆவணங்களை அடுத்தவர்கள் பார்வைIட முடியும். இந்த Documents and settings போல்டர் மூலம் எமது ஆவணங்களை வேறு எவரும் அணுகா வண்ணம் பாதுகாக் கவும் விண்டஸில் வழி வகைகளுண்டு. அதனைத்தான் சொல்கிறது மேலேயுள்ள தலைப்பு.

உங்கள் போல்டரை நீங்கள் மட்டுமே திறந்து பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது விண்டோஸ். இந்த வசதி பயனர் கணக்கிற்குரிய போல்டரிற்குள்ளேயிருக்கும் (user profile folder) My Documents மற்றும் அதற் குள்ளேயிருக்கும் subfolder, Desktop, Start Menu, Cookies, and Favorites போன்ற போல்டர்களை மட்டுமே இவ்வாறு பாதுகாக்கலாம். அத்துடன் இந்த வசதியைப் பெற நீங்கள் விண்டோசஸ நிறுவியிருக்கும் ட்ரைவானது (NTFS – New Technology File System) முறையில் format செய்யப்பட்டிருத்தல் அவசியம்.

போல்டர்களை எவ்வாறு பாதுகாப்பது?
முதOல் சிஸ்டம் நிறுவியுள்ள ட்ரைவை (அனேகமாக Drive: C ) திறந்து கொள்ளுங்கள். அந்த ட்ரைவிலுள்ள பைல்கள் நீல நிற “போர்வை”யால் மறைக்கப்படிருந்தால் Show the contents of this drive என்பதில் க்ளிக் செய்து போர்வையை நீக்குங்கள். பிறகு அங்கு Documents and Settings போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் பயனர் கணக்குக்குரிய போல் டரைத் திறந்து அதனுள்ளேயிருக்கும் எந்த போல்டரை மற்றவர்கள் அணுகாமல் பாதுகாக்க வேண்டுமோ அந்த போல்டரின் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது வரும் டயலொக் பொக்ஸில் Sharing டேபைக் க்ளிக் செய்து Make this folder private so that only I have access to it என்பதைத் தெரிவு செய்து விடுங்கள். அவ்வளவுதான். இனி எவரும் உங்கள் போல்டர்களை அணுக விண்டோஸ் அனுமதிக்காது.
-அனூப்-

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *