விண்டோஸின் வழக்கமான இயக்கம் பாதிக்கும் வகையில் ஏதேனும் பிரச்சினை தோன்றும் போது விண்டோஸை இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்கான ஒரு விசேட ஏற்பாடே இந்த சேப்மோட். விண்டோஸை வழமையாக இயங்க விடாமல் பண்ணிய காரணத்தைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய சேப்மோடைப் பயன்படுத்தலாம். சேப்மோடில் வைத்து பிரச்சினையைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்த பின்னர் கணினியை மீள இயக்கும்போது விண்டோஸ் வழமைபோல் இயங்க ஆரம்பிக்கும்.
சேப் மோடில் கணினியை இயக்கும்போது
• autoexec.bat, config.sys எனும் பைல்கள் இயக்கப்படுவதில்லை.
• அனேகமான டீவைஸ் ட்ரைவர் மென்பொருள்கள் இயக்கப்படுவதில்லை. உதராணமாக ப்ரிண்டர் , ஸ்கேனர் போன்ற வன்பொருள் கருவிகளை இயக்குவதற்கான மென்பொருள்கள் இயக்கப்படுவதில்லை.
• கணினியில் பொருத்Aயுள்ள விஜீஏ கார்ட்டிற்கான டீவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக விண்டோஸிலுள்ள வீஜீஏ ட்ரைவரே இயக்கப் படும்.
இது போன்ற பல செயற்பாடுகள் சேப்மோடில் முடக்கப்படுன்றன.
அத்துடன் Cண்டோஸ் டெஸ்க்டொப் 16 வர்ணங்களுடன் 640 x 480 ரெஸலுயூசனுடனும் நான்கு மூலைகளிலும் சேப்மோட் எனும் வாசகங்க ளுடனும் தோன் றும்.
விண்டோசை ஆரம்பிக்கும்போது அது முறைப்படி இயங்க மறுத்திருந்தால் அடுத்த முறை இயக்கும் போது தானாகாவே விண்டோஸ் சேப்மோடில் இயங்கும். அவ்வாறல்லாமல் `நீங்களாகவே சேப் மோடிற்குச் செல்ல வேண்டுமானால் விண்டோஸை ஆரம்பிக்கும் போதே கீபோர்டில் F8 விசையை அழுத்துவதன் மூலம் வரும் பூட் மெனுவில் சேப்மோடைத் தெரிவு செய்து சேப் மோடிற்குள் பிரவேசிக்கலாம்.
சேப்மோடிற்குள் பிரவேசித்து என்னதான் செய்வது? கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கிய காரணத்தைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கே சேப்மோடில் நுளைகிறோம். உதாரணமாக, நீங்கள் எதேனுமொரு வன்பொருள் சாதனத்தைக் கணினியில் புதிதாக இனைத்திருந்தால், கன்ட்ரோல் பேனலில் நுளைந்து அதற்குரிய டீவைஸ் ட்ரைவரை அகற்ற வேண்டும். பின்னர் [பூட் செய்து விண்டோஸ் சரிவர இயங்கினால் அந்த வன்பொருளையும் அதற்கான டீவைஸ் ட்ரைவரையும் விண்டோஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதேபோல் ஏதேனுமொரு கணினி விளையாட்டு அல்லது பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது இப்பிரச்சினை தோன்றியிருந்தால் அதற்கும் இதே வழி முறையைக் கையாளலாம். அதாவது கன்ட்ரோல் பேனலில் Add / Remove Programs மூலம் அந்த மென்பொருளை அகற்றி விடுங்கள்.
விண்டோஸ் முறையாக இயங்காமைக்கான காரணம் வன்பொருளோ மென்பொருளோ அல்ல என இருந்தால் அனேகமாக விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி பழுதடைந்திருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் விண்டோஸை மீண்டும் புதிதாக நிறுவுவதன் மூலமே நிவர்த்தி செய்யலாம்.
-அனூப்-
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil