கூகுல் க்ரோம் இணைய உலாவியின் அண்ட்ராய்ட் கருவிகளுக்கான செயலியில் ((Chrome – Android App)) பயனுள்ள ஓர் அம்சத்தை கடந்த வாரம் கூகுல் அறிமுகம் செய்துள்ளது. அதாவது குரோம் செயலியில் இணைய இணைப்பின்றி ஓஃப்லைனில் (offline). செய்திக் கட்டுரைகளை இனிமேல் படிக்க முடியும்.
உங்கள் அண்ட்ராயிட் சாதனம் வை-ஃபை இணைப்பில் இருக்கும் போது உங்கள் விருப்பத்திற்குரிய தளங்களின் செய்திக் கட்டுரைகளை க்ரோம் செயலி முன்னரே டவுன்லோட் செய்து சேமித்துக் கொள்ளும். இந்த செய்திக் கட்டுரைகளை நீங்கள் ஓஃப் லைனிலேயே இணைய இணைப்பின்றிப் படிக்கலாம்.
இந்த வசதி ஏற்கனவே சில மூன்றாம் தரப்பு செயலிகளிலும் கிடைக்கிறது. ஆனால் அவற்றைப் பயன் படுத்தும் போது எவ்வகையான கட்டுரைகளை சேமிக்க வேண்டும் என்பதை பயனர் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.; கூகுல் தரும் இந்த வசதி உங்கள் அமைவிடம் மற்றும் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில் பயனர் தலையீடின்றி தானாகவே அவை சார்ந்த செய்திக் கட்டுரைகளை உலாவியின் பதுக்கு ((browser cache) நினைவகத்தில் சேமித்துக் கொள்கிறது.
;குரோம் செயலி உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு ஆப்லைனில் காண்பிக்கும் இந்தக் கட்டுரைகள் எப்போதுமே நீங்கள் படிக்க விரும்பம் செய்தியாக இருக்க மாட்டாது. எனினும் ஒரு பிரயாணத்தில் இருக்கும் போதோ, மட்டுப்படுத்தப்பட்ட அளவு மொபைல் டேட்டா கையிருப்பில் இருக்கும் போதோ அல்லது இணைய வசதி அறவே இல்லாத இடங்களிலோ இவ்வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வசதியைப் பயன் படுத்த முதலில் க்ரோம் செயலியின் மிக அண்மைய பதிப்பினை நிறுவிக் கொள்ள வேண்டும். அடுத்து பயனர் தங்களுக்கு விருப்பமான செய்திகளை; தேர்வு செய்ய வேண்டும். பயனர் இருக்கும் இடம்இ அவர் முன்னர் பார்வையிட்ட தளங்கள், அவரது விருப்பத் ;தேர்வுகள் அடிப்படையில் செய்திகளின் முக்கியத்துவத்தை அறிந்து க்ரோம் செயலியே தானாக செய்திக் கட்டுரைகளை வை-ஃபை இணைப்பில் இருக்கும் போது டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டு ஓஃப் லைனில் அவற்றைக் காண்பிக்கும்