இணைய வழி உரையாட Skype

இணையம் வழியே தொலைபேசி அழைப்புக்களை எடுப்பது ‏தற்போது பிரபல மாகி வருகிறது. இதற்குக் காரணம் ‎ வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக் களை மிகக் குறைந்த செலவில்; எடுக்கக் கூடியதாக இருப்ப தாகும். இணையத்தின் மூலம் கணினியிருந்து கணினிக்கும் (PC-to-PC), கணினியிருந்து சாதாரண தொலைபேசிக்கும் (PC-to-Phone) என ‏இரண்டு வழிகளில் தொடர்பை எற்படுத்தலாம். இவ்வாறு இணையத்தின் மூலம் தொலைபேசுவதை internet telephony எனப்படும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை Net-2-Phone ‏எனும் இணைய தொலைபேசி சேவை பிரசித்தமாயிருந்தது. ‏இத‎ன்‎ மூலம் கணினியை உபயோ கித்து உலகின் எப்பகுதிக்கும் தொலைபேசி அழைப்புகளை எடுக்கக் கூடியதா யிருந்தது. ‏தற்போது நெட்டுபோனின் இடத்தைக் கைப்பற்றியுள்ளது ‘ஸ்கைப்’ (Skype) எனும் இணைய தொலைபேசி சேவை.
நெட்டுபோன் மற்றும் அது போ‎‎ன்ற ஏனைய சேவைகளில் கையாளப் படும் VOIP (Voice Over Internet Protocol) தொழில் நுட்பத்திலுள்ள குறைகளைக் ‏இனங்கண்டு உயர் தொழில் நுட்பத்தில் இன்டனெட் தொலைபேசிச் சேவையை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது ‘ஸ்கைப்’. விண்டோஸ், Mac, Linux இயக்கச் சூழலுக்கென வெவ்வேறு மெ‎‎ன்பொருள்களை வெளியிட்டுள்ளது ஸ்கைப். விண்டோஸிற்கான 22.6 MB பைல் அளவு கொண்ட ஸ்கைப் மெ‎‎ன்பொருளை, www.skype.com எனும் ‏இணைய தளத்திலிருந்து ‏இலவசமாக டவு‎‎ன்லோட் செய்து கொள்ளலாம். அத்தோடு இதனைப் பய‎ன்‎படுத்த ‏மைக்ரொபோனுட‎ன்‎ கூடிய தரமான ஒரு ஹெட்செட் அவசியம்.

லக்ஸ்ம்பர்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஸ்கைப் நிறுவனம் Niklas Zennstrய்m, Janus Friis என்பவர்களால் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. பின்னர் 2005 ஆம் ஆண்டில் eBay எனும் பிரபல நிறுவனம் ஸ்கைப் நிறுவனத்தை தனதாக்கிக் கொண்டது. ஸ்கைப் குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியடைந்து தற்போதுள்ள, இன்டனெட் டெலி போணி மெ‎ன்பொருள்கள் அனைத்தையும் விட மு‎ன்‎னணியில் ‏ திகழ்கிறது.

– ஸ்கைப் வழங்கும் PC-to-PC மெ‎‎ன்பொருள் மூலம் எவ்வித கட்டணமுமின்றிப் பேச முடிகிறது. கணினியிருந்து கணினிக்குத் தொடர்பு கொள்வத‎ன்‎ மூலம் இணையத்தில், இணைந்திருப்பதற்காகும் செலவைத் தவிர வேறு எந்தச் செலவும் ஏற்படுவதில்லை. எனினும் தொடர்பு கொள்ள வேண்டிய நபரும் இணையத்தில் இணைந்திருப் பதோடு ஸ்கைப் மென்பொருளை நிறுவி ஸ்கைப் கணக்கொ‎‎ன்றையும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

– ஸ்கைப் மூலம் கணினியிருந்து நிலையான அல்லது செல்லிட தொலைபேசிக்கு அழைப்புகளை எடுக்க முடியும் PC-to-Phone பேசும் SkypeOut எனும் இச்சேவையை உபயோகிக்க சிறு தொகையை கட்டண மாக அறவிடுகிறது. ‏ஸ்கைப் உபயோகித்து தொலை பேசிக்கு தொடர்பை ஏற்படுத்து வதானது சாதரணமாக நா‎ம் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுப்பது போல் மிக எளிமையான செயற்பாடாகும்.

– ஸ்கைப் இன் ( SkypeIn )மூலம் எந்த வொரு தொலைபேசியிலிருந்தும் ஸ்கைப் தொலைபேசி இலக்கத்திற்கு (Virtual Mobile Number) டயல் செய்யப்படும் அழைப்பை கணினியிலேயே பெறலாம். எனினும் இந்த வசதி ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே மட்டுப் படுத்தப்பட்டுள்ளது

– ஸ்கைப்காஸ்ட் (Skypecast) என்பது எமக்கு அறிமுகமில்லாத பலருடன் ஒரே நேரத்தில் குழு உயாடலில் ஈடுபடக் கூடிய ஒரு சேவை. இதன் மூலம் குரல் வழி உரையாடலில் ஈடுபடலாம். அடுத்த வர்கள் உரை யாடுவதை கேட்டுக் கொண்டும் இருக்கலாம்.

– வெப் கெம் மூலம் நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசும் வீடியோ கன்பரென்ஸிங் முறை 2006 ஆம் ஆண்டில் ஸ்கைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முலம் உயர் தரத்திலான வீடியோ காட்சியைப் பெறலாம். வீடியோ கன்ப்ரென்ஸிங் செய்ய டயல்-அப் இணைப்பை விட அதி வேக இணைய இணைப்பு (Broadband) இருந்தால் சிறப்பாக இயங்கும்

– கணினியிருந்து கணினிக்குப் பேசும் வசதி MSN மற்றும் Yahoo Messenger களில் ‏இருந்தாலும் ஸ்கைப்பில் கிடை‏க்கப் பெறும் ஒலித்தரம்‏, இவற்றில் கிடைப்பதில்லை. ஸ்கைப்பில் பேசும்போது பக்கத்து அறையிலிருந்து உரையாடுவது போ‎ன்‎ற உணர்வு ஏற்படுவதுட‎ன் சாதாரண தொலைபேசி அழைப்பை விடவும் மேம்பட்டதாகவுமுள்ளது. அத்தோடு தொலைபேசி உரையாடலை யாரும்‏, இடை மறித்துக் கேட்க முடியாதபடி encrypt செய்யப் படுகிறது.

– ஸ்கைப் VOIP, SIP (Session Initiation Protocol) தொLல் நுட்பத்Aல் அல்லாமல் ஸ்கைப் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய தொழில் நுட்பத்தில் ‏இயங்குகிறது.

– அனேகமான இ‏ன்டனெட் டெலிபோனி மெ‎‎ன்பொருள்கள் Firewall போ‎‎ன்ற பாதுகாப்பு மெ‎‎ன்பொருள் மற்றும் NAT (Network Address Translator), router நிறுவப்பட்டுள்ள கணினிகளில் ஒழுங்காக செயற்பட மறுக்கும். இதனால் கணினியில் சில செட்டிங்ஸ் மாற்ற வேண்டியிருக்கும். இதுபோ‎ன்‎ற சூழ்நிலைகளில் எமது தலையீடு‏, இல்லாமல் தானாகவே செயல்படுமாறு ஸ்கைப் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்கைப் மூலம் ஒரு நேரத்தில் ஒருவரோடு மட்டுமல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடும் (Conference Calling) தொடர்பு கொள்ளலாம். அத்துட‎ன்‎ Text Chat செய்யக் கூடிய வசதி, பைல் பரிமாற்றம் (file transfer) செய்யும் வசதி என பல வசதிகள் ஸ்கைப்பில் கிடைக்கின்றன.

ஸ்கைப் சேவைகளைப் பெற முதலில் ஸ்கைப் கணக்கொ‎‎ன்றை உருவாக்கிக் கொள்ள வே‎ண்டும். அதே போல் ஸ்கைப் மூலம் ஒருவரோடு தொடர்பு கொள்ளவும் அவரின் Skype ID அவசியம்.

கடந்த 2007 ஆம் வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை 276 மில்லியன் ஸ்கைப் பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அதேபோல் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதியன்று உலகம் முழுவதிலுமிருந்து 12,547,006 ஸ்கைப் பயனர்கள் ஒரே நேரத்தில் இணைப்பில் இருந்ததாக மேலுமொரு ஆச்சரியப்படத்தக்க தகவலை ஸ்கைப் வெளியிட்டுள்ளது

-அனூப்-

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *