ஒவ்வொரு இணையதள முகவரியும் http://www என ஆரம்பிப்ப தோடு .com, .net, .org போன்ற வெவ்வேறு டொமேன் பெயர்களைக் (domain name) கொண்டிருக்கும் என்பது நீங்கள் அறிந்ததுதான். இவற்றை web browser ன் address bar இல் ஒவ்வொரு இணைய தள முகவரியையும் டைப் செய்யும் போதும் சேர்க்க வேண்டும். எனினும் ஒவ்வொரு முறையும் இவற்றை டைப் செய்வதற்கு அனேகருக்கு சோம்பலாயிருக்கும். இதனைப் உணர்ந்து இன்டர்னெட் எக்ஸ்ப்லோரரில் ஒரு குறுக்கு வLழிதரப்பட் டுள்ளது. நிறுவன பெயரை மட்டும் டைப் செய்து கீபோர்டில் கன்ட்ரோல் மற்றும் என்டர் விசைகளை ஒரே நேரத்தில் தட்ட http:// www மற்றும் .com பகுதிகளை வெப் பிரவுஸரே தானாகப் போட்டுக் கொள்ளும்படி செய்யலாம். உதாரணமாக yahoo என டைப் செய்து Ctrl + Enter விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த http://www.yahoo.com என முழுமையாகத் தோன்றும். இந்த வசதியை இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் .com எனும் டொமேன் பெயருக்கு மட்டுமே தருகிறது. எனினும் மொஸில்லா பயர்பொக்ஸ் இன்னும் கூடுதலாக .net, .org ஆகிய டொமேன் பெயர்களுக்கும் இந்த வசதியைத் தருகிறது. பயபொக்ஸில் .net தளங்களுக்கு Shift+Enter விசைகளையும் .org தளங்களுக்கு Shift+Ctrl+Enter விசைகளையும் ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். Alt+Enter விசைகளை அழுத்த http://www எனும் பகுதியை மட்டும் வர வைக்கலாம்.
Check Also
Temporary Password for your FB account
பொது இடத்திலோ, இன்டர்நெட் கஃபேயிலோ இணைய வசதிகளைப் பயன்படுத்தும் போது உங்களின் Facebook கணக்கிற்குரிய கடவுச்சொல்லுக்குப் பதிலாக Facebook வழங்கும் …