InfotechTamil

GIT MCQ Number Sys & Logic Gates

2008

1. 67 எனும் தசம எண்ணுக்குச் சமவலுவான துவித எண் எது ?
(1) 1100001                   

(2) 1000011          

(3) 1010001          

(4) 1000101

2. 11011101010 எனும் துவித எண்ணுக்குச் சமவலுவான பதினறும் (hexadecimal) எண் எது ?
(1) 6EA                          

(2) DD2                

(3) 3352               

(4) 6722

3. எண்ம இலக்கத் தொகுதியின் அடி யாது ?
(1) 6                           

(2) 8                          

(3) 10                         

(4) 16

4. 1010 மற்றும் 11 ஆகிய துவித எண்களிரண்டினதும் கூட்டுத்தொகை யாது ?
(1) 1110               

(2) 1011                         

(3) 1010                

(4) 1101

5. A + (A.B) எனும் தருக்கக் கோவை பின்வரும் எதற்குச் சமவலுவாகும் ?
(1) A                          

(2) B                              

(3) A + B               

(4) A.B

6. உள்ளீடுகள் இரண்டும் ஒன்றையொன்று இடைநிரப்பும் (complement)போது பெறுமானம் 1 ஐ வருவிளைவாகத் தரும் தருக்கச் செயலைத் தெரிவு செய்க.
(1) NOR                    

(2) NAND            

(3) XOR                         

(4) XNOR

7. வருவிளைவு 1 ஆவதற்கு A, B உள்ளீடுகளுக்கு வழங்க வேண்டிய பெறுமானங்களைக் காண்க.


(1) 0 உம் 0 உம்        

(2) 0 உம் 1 உம் 

(3) 1 உம் 0 உம் 

(4) 1 உம் 1 உம்

8. UNICODE குறியீட்டு முறையினால் பயன்படுத்தப்படும் பிட் (bit) எண்ணிக்கை யாது ?
(1) 7                            

(2) 8                            

(3) 9                                        

(4) 16

2009

1. 73 எனும் எண்ம எண்ணுக்குச் சமவலுவான துவித எண் எது ?
(1) 100101                

(2) 111011                

(3) 1001001             

(4) 100111

2. 11010101110 எனும் துவித எண்ணுக்குச் சமவலுவான பதின்அறும் எண்
(1) 6532                    

(2) D56                      

(3) 3256                                

(4) 6AE

3. பதின்ம எண் முறைமையின் தளம்
(1) 2 ஆகும்.          

(2) 8 ஆகும்.          

(3) 10 ஆகும்.                    

(4) 16 ஆகும்.

4. 1001 மற்றும் 101 ஆகிய துவித எண்களின் கூட்டுத்தொகை
(1) 1110 ஆகும்.                            

(2) 1011 ஆகும்.

(3) 1010 ஆகும்.                

(4) 1100 ஆகும்.

5. A.(A+B) எனும் தருக்கக் கோவைக்குச் சமவலுவானது
(1) A               (2) B               (3) A+B                      (4) A.B

6. பின்வரும் உண்மை அட்டவணைக்குரிய தருக்கச் செய்பணியைத் தெரிவு செய்க.
(1) NOR                    

(2) NAND                 

(3) XOR                    

(4) XNOR

7. விளைவு 1 ஆவதற்கு A, B உள்ளீடுகளுக்கு முறையே வழங்கவேண்டிய பெறுமானங்களைக் காண்க.


(1) 0 உம் 0 உம்            

(2) 0 உம் 1 உம்  

(3) 1 உம் 0 உம்     

(4) 1 உம் 1 உம்

8. இருமக்குறிமுறைத் தசம (Binary Coded Decimal (BCD) குறிமுறை ஒழுங்கமைப்பில் பதின்ம இலக்கமொன்றைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகப் பயன்படுத்தப் படும் பிட் எண்ணிக்கை
(1) 2                           

(2) 4                           

(3) 6                           

(4) 8

2010

1. துவித எண் 1001101 இன் தசமச் சமவலு
(1) 71                                   

(2) 77                                    

(3) 79                                    

(4) 83

2. தசம எண் 137 இன் துவிதச் சமவலு

(1) 10001011                      

(2) 1001001                        

(3) 10001001                      

(4) 1101001

4. பின்வரும் எச்சோடி துவித எண்கள் தசம வடிவமாக மாற்றப்படும்போது முறையே ஓர் ஒற்றைப் பெறுமானத்தையும் ஓர் இரட்டைப் பெறுமானத்தையும் வகைகுறிக்கும்?
(1) 0101, 0011                   

(2) 0010, 1000                   

(3) 0111, 0001                   

(4) 0111, 0110

6. 1GB  அண்ணளவாக எதற்குச் சமானம் ?
(1) 10 KB                             

(2) 1000 MB                      

(3) 103 KB                           

(4) 103 MB

7. ஒரு தந்தையின் வயது அவருடைய மகளினதும் அவருடைய மகனினதும் வயதுகளின் கூட்டுத்தொகைக்குச் சமம். அவருடைய மகளினதும் மகனினதும் வயதுகள் துவித வடிவத்தில் முறையே 11110, 11011 ஆண்டுகளாகும். தந்தையின் வயது தசம வடிவத்தில் யாது ?
(1) 55                                    

(2) 57                                    

(3) 59                                    

(4) 62

8. வருவிளைவாக 0 ஐ உண்டாக்குவதற்கு A, B ஆகியவற்றின் பெறுமானங்களை
முறையே காண்க.


(1) 0, 1 ஆகியன.                      

(2) 1, 1 ஆகியன.                      

(3) 1, 0 ஆகியன.      

(4) 0, 0 ஆகியன.

9. பின்வரும் மெய்நிலை அட்டவணையை ஒத்த தருக்கச் செய்பணியைத் (logical operation) தெரிவு செய்க.


(1) (X OR Y) AND Y               

(2) (X AND Y)               

(3) NOT (X OR Y)          

(4) (X AND Y) OR X

2011

1.மோகன் ஒரு புத்தகத்தை வாங்குவதற்குத் தனது தந்தையிடமிருந்து ரூ.40. ஜயும் தனது தாயாரிடமிருந்து ரூ. 30/- ஐவும் பெறுகின்றான். அவனுக்குக் கிடைத்த மொத்தப் பணத்தின் துவிதச் சமவலு

(1) 1000011

(2) 10000100

(2) 11110011011

(3) 1000101

(4) 1000110

2. 2011ஆம் ஆண்டைக் கணினியின் முதன்மை நினைவகத்திலே துவித வடிவத்தில் தேக்கி வைக்கும் விதம்

(1) 11110011001

(2) 11110011011

(3) 111011011

(4) 11111111011

6. தரப்பட்டுள்ள தருக்கச் சுற்றில் வருவிளைவாக 1 ஐப் பெறுவதற்கு A, B ஆகிய உள்ளீடுகள் முறையே யாதாக இருக்க வேண்டும்?

(1) 0 உம் 1 உம்

(2) 0 உம் 0 உம்

(3) 1 உம் 0 உம்

(4) 1 உம் 1 உம்

8. தரப்பட்டுள்ள மெய்நிலை அட்டவணையைக் கருதுக:

இந்த அட்டவணையின் வருவிவைவைத் தருவது

(1) X AND Y

(2) NOT (X AND Y)

(3) XOR Y

(4) NOT (X ORY)

2012

1. 10101101 என்னும் துவித (Binary) எண்ணுக்குச் சமவலுவான தசம (Decimal) எண்
(1) 170                      

(2) 173                      

(3) 177                                  

(4) 1912

2. ஓர் அன்னாசிப் பழத்தின் விலை ரூ. 160/- உம் ஒரு மாம்பழத்தின் விலை ரூ. 40/- உம் ஆகும், ஓர் அன்னாசிப் பழத்தினதும் ஒரு மாம்பழத்தினதும் விலைகளின் கூட்டுத்தொகையின் துவித வடிவம்
(1) 10001000           

(2) 11001000                    

(3) 11011000

(4) 11011010

3. NOT(NOT(A OR B)) இன் வருவிளைவு எதற்குச் சமவலுவானது ?
(1) NOT(A OR B)                

(2) A OR B               

(3) A AND B             

(4) NOT(A AND B)

6. இங்கு காணப்படும் தருக்கச் சுற்றின் வருவிளைவு 1 ஆகும். A, B ஆகியவற்றின் உள்ளீடுகள் முறையே யாவை ?


(1) 0, 0                      

(2) 0, 1                      

(3) 1, 0                                  

(4) 1, 1

8. பின்வரும் மெய்நிலை அட்டவணையைக் கருதுக :


பின்வருவனவற்றில் எது V என்னும் குறியீட்டினால் வகைகுறிக்கப்படுகின்றது ?
(1) OR                       

(2) AND                     

(3) NOT(OR)            

(4) NOT(AND)

2013

1. தசம் எண் 57 இன் துவித வலு யாது ?
(1) 101001                

(2) 110001                

(3) 111011               

(4) 111001

3. கீழேயுள்ள உண்மை அட்டவணையைக் கருதுக:

மேலேயுள்ள உண்மை அட்டவணையை வகைகுறிக்கும் தர்க்க வாயில்/ வாயில்கள் எது/எவை ?

4. கீழே தரப்பட்டுள்ள தர்க்கச்சுற்றினைக் கருதுக:

மேற்குறித்த தர்க்கச் சுற்றின் வருவிளைவு X இன் பெறுமானம் 1 எனின், A, B ஆகிய உள்ளீடுகளுக்கான பெறுமதிகளைத் துணிக.
(1) A=0, B=0            

(2) A= 1, B=0           

(3) A= 0, B=1           

(4) A=1, B=1

5. ஓர் உண்மை அட்டவணையும் அதன் ஒத்த தர்க்கச்சுற்றும் கீழே தரப்பட்டுள்ளன.

உண்மை அட்டவணையிலுள்ள (X),Y) என்பவற்றின் துவித எண் பெறுமானங்கள் முறையே யாவை ?

1) 0, 0                      

(2) 0, 1 

(3) 1, 0   

(4) 1, 1

11. ஒரு தர்க்க வாயிலுக்கு ஒப்பான செயலைக் கொண்ட கீழே தரப்பட்ட சுற்றினைக் கருதுக:

(மேலேயுள்ள சுற்று தொடர்பான சரியான கூற்று / கூற்றுகள் எது / எவை ?

A – ஆளி X இனை மூடும்போது (ON) மின்குமிழ் ஒளிரும்.

B – X, Y ஆகிய இரண்டு ஆளிகளையும் மூடும்போது (ON) மின்குமிழ் ஒளிரும்.

C – ஆளி X இனைத் திறந்து (OFF) ஆளி Y இனை மூடும்போது (ON) மின்குமிழ் ஒளிரும்.

(1) A, B ஆகியன மாத்திரம்.                

2) B, C ஆகியன மாத்திரம்.

3) A, C ஆகியன மாத்திரம்                   

(4) A, B, C ஆகிய எல்லாம்.

2014

4. கீழே தரப்பட்ட தர்க்கச் சுற்றின் உள்ளீடுகள் அருகிலுள்ள உண்மை அட்டவணையில் தரப்பட்டுள்ளன.அட்டவணையில் நிரல் C  இற்குரிய (மேலிருந்து கீழாக)  வருவிளைவுகள் முறையே எவை ?

1. 0,0,0,0

2. 0,1,0, 1

3. 1, 0, 1, 0

4. 1,1,1,1

5. தசம (decimal) எண் 101 இன் துவிதச் சமவலு யாது ?

1,1010101

2. 1011101

3. 110010 1

4. 11001001

6. 01000010 என்னும் துவித  எண்ணின் தசமச் சமவலு யாது ?

1.64

2. 65

3. 66

4. 67

7. ஒரு இலக்கமுறைக் கமராவின் தேக்ககத்தின் (storage) கொள்ளளவு 16GB. இக்கமராவில் 1 MB அளவுள்ள எத்தனை நிழற்படங்கள் (photos) அதிகூடியளவில் (அண்ணளவாக) சேமிக்கப்படலாம் ?

1. 16

2. 62

3. 16000

4. 16 Million

8. A, B என்னும் இரண்டு ஆளிகள் (switches) மூலம் கட்டுப்படுத்தப்படும் மின்குமிழை வகைகுறிக்கும் கீழே தரப்பட்ட சுற்றினைக் கருதுக- பின்வருவனவற்றுள் எது?

தரப்பட்ட சுற்றின் செயன்முறையைத் திறமையாக விளக்கும் தர்க்கப்படலை/படலைகள் பின்வருவனவற்றுள் எது?

2015

2. பின்வரும் தருக்கச் சுற்று வரிப்படத்தைக் கருதுக.


மேற்குறித்த தருக்கச் சுற்றுக்காக மெய்நிலை அட்டவணையில் தரப்பட்டுள்ளன
(1) 0, 0, 0, 0                        

(2) 0, 1, 0, 1                       

(3) 0, 1, 1, 0

(4) 1, 0,1, 0

4. ஒரு பற்றரியையும் இரு ஆளிகளையும் (A யும் B யும்) பயன்படுத்தி ஒரு குமிழை உரு 1 இலும் உரு 2 இலும் தரப்பட்டுள்ளன.

பினவரும் தருக்க வாயிற் சோடிகளில் எது மேற்குறித்த உரு 1 இலும் உரு 2 தொழிற்பாடுகளைக் குறிக்கின்றது?

6. பின்வரும் தசம எண்களில் எது துவித எண் 100110 இற்குச் சமவலுவானது ?
(1) 27                  

(2) 30                          

(3) 38                  

(4) 43

7. பின்வரும் துவித எண்களில் எது தசம எண் 73 இற்குச் சமவலுவானது ?
(1) 1000101       

(2) 1001001                 

(3) 1010001       

(4) 00001

2016

1. பின்வரும் துவித எண்களில் எது தசம எண் 35 இற்குச் சமவலுவானது
(1) 100001

(2) 100011

(3) 101011

(4) 101010

10. பின்வரும் தசம எண்களில் எது துவித எண் 10001011 இற்குச் சமவலுவானது ?

(1) 113

(2) 139

(3) 213

(4) 231

31. 1101101, 1001, 1110010 என்னும் துவித எண்களின் இறங்கு வரிசை

(1) 1110010, 1101 101, 1101001

(2) 1101101, 1101001, 1110010

(3) 1110010, 1101001, 1101101

(4) 1101001, 1101101, 1110010

36. அட்டவணையில் தரப்பட்டுள்ள உள்ளீடுகள் பிரயோகிக்கப்படும்போது மேற்குறித்த தருக்கச் சுற்றின் உரிய வெளியீடுகள் முறையே யாவை?

(1) 0, 0, 0, 0

(2) 0, 0, 0, 1

(3) 0, 1, 0, 1

(4) 1, 0, 0, 0

39. ஒரு குறித்த குறிமுறையில் A தொடக்கம் Z வரையுள்ள நெடுங்கணக்கு வரியுருக்கள் அடுத்துவரும் துவித எண்களாகக் குறிமுறைப்படுத்தப்பட் டுள்ளன. A ஆனது 1000000 எனக் குறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரியுரு C இற்குச் சமவலுவான துவித எண் யாது ?
(1) 1000001

(2) 1000010

(3) 1000011

(4) 1000101

2017

5. பின்வரும் துவித (binary) எண்களில் எது தசம (decimal) எண் 40 இற்குச் சமவலுவானது?

(1) 000100

(2) 100000

(3) 100100

(4) 101000

6. 01001101, 10110011, 11010011 என்னும் மூன்று துவித எண்களின் இறங்குவரிசை

(1) 01001101, 10110011, 11010011

(2) 11010011, 10110011, 01001101

(3) 11010011, 01001101, 10110011

(4) 10110011, 11010011, 01001101

7. துவித முறைமையில் ஆங்கில நெடுங்கணக்கின் எழுத்துகளையும் வேறு வரியுருக்களையும் (Characters) வகைகுறிப்பதற்குக் குறிமுறை முறைமைகள் (Coding systems) பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய ஒரு குறிமுறை முறைமையில் நெடுங்கணக்கின் எழுத்துகள் அடுத்துவரும் துவித எண்களில் வகைகுறிக்கப்பட்டும் எழுத்து M ஆனது 1001101 எனக் குறிமுறைப்படுத்தப்பட்டும் இருப்பின், எழுத்து O எங்ஙனம் குறிமுறைப்படுத்தப்படும்?

(1) 1001011       

(2) 1001100      

(3) 1001110-8     

(4) 1001111

8. அட்டவணையில் தரப்பட்டுள்ள உள்ளீடுகள் (inputs) பிரயோகிக்கப்படும்போது பின்வரும் தருக்கச் சுற்றின் வெளியீடுகள் (Z) முறையே யாவை ?

(1) 0, 0       

(2) 0, 1         

(3) 1, 0         

(4) 1, 1

2018 Online Prototype

18.  பின்வரும் துவித  எண்களின் 10112 , 11012 , 11102  ஏறுவரிசையை காட்டுவது

1. 10112 , 11012, 11102

2. 11102 , 11012 , 10112

3. 11102 , 10112 , 11012

4. 11012 , 10112 , 11102

19. பின்வரும் உண்மை அட்டவணைகள் எந்த பூலியன் வெளிப்பாட்டைக் குறிக்கின்றன?

21.  கீழுள்ள உண்மை அட்டவணையைக் கருதுக

பின்வரும் தர்க்க வாயில்களில் எது இவ்வட்டவணையைப் பிரதிபலிக்கிறது?

1. AND

2. NOT

3. OR

4. NOT (OR)

22. ASCII குறியீட்டு முறைமையில், ‘E’ என்ற எழுத்துக்கள் தசம எண் 69 ன் இரும வடிவுக்குச்  சமமானதாகும். ASCII குறியீட்டில் ‘B’ என்ற எழுத்தைக் குறிக்கும்  பைனரி மதிப்பு பின்வருவனவற்றில் எது?

1. 11000012

2. 10000102

3. 10010012

4. 11001002

26.  971 எனும்   எண் தொடர்பாக பின்வரும் கூற்றுக்களில்  சரியானது எது?

1. இது ஒரு தசம எண்.

2. இது ஒரு இரும எண்ணாக அல்லது தசம எண்ணாக இருக்கலாம்.

3. இது ஒரு பதினறும  எண்ணாகும்.

4. இது ஒரு தசம அல்லது பதினறும  எண்ணாக இருக்கலாம்.

42. பின்வரும் துவித எண்களில் எது தசம எண் 35 இற்குச் சமவலுவானது ?

1. 100001

2. 100011

3. 101011

4. 101010

Exit mobile version