InfotechTamil

GIT Model Question – Spreadsheet Exercise Tamil

sales.xlsx

1. sales.xls எனும் கோப்பை மேலுள்ள இணைப்பிலிருந்து உமது கணினிக்குத் தரவிரக்கம் செய்க. இவ்விரிதாளானது ஒரு புத்தகக் கடையில் ஒரு குறித்த நாளொன்றின் விற்பனை விவரங்களைக் காட்டுகிறது.

  1. தரவிரக்கம் செய்த கோப்பை எம்.எஸ்.எக்ஸல் விரிதாள் மென்பொருளோடு திறந்து கொள்ளுங்கள்.
  2. நிரல் B யிற்கு வலப்புறமாக ஒரு புதிய நிரலைச் செருகுக. அதன் தலைப்பாக Quantity என்பதை வழங்கி அதன் கீழ் (C2 முதல் c6 வரை) கீழுள்ளவாறு  தரவுகளை உள்ளீடு செய்க.
  3. பொருளொன்றின் விற்பனைத் தொகையானது பொருளின் எண்ணிக்கையை அலகு ஒன்றின் விலையால் பெருக்குவதன் மூலம் பெறப்படுகிறது.

Amount = Quantity  X Unit price  

பென்சில் விற்பனை மூலம் பெறப்பட்ட  தொகையைக் கணிக்க D2 கலத்தில் பொருத்தமான சூத்திரத்தை நுழைக்க.

  1. மேலே இட்ட அதே சூத்திரத்தை D3 முதல் D6 வரை நகல் செய்வதன் மூலம் ஏனைய பொருட்களின் விற்பனை மூலம் பெறப்பட்ட தொகையைக் கணிக்க
  2. அனைத்து பொருட்களுக்கும் 2 % விலைக் கழிவு வழங்கப்படுமாயின் பென்சில் விற்பனையில் வழங்கப்பட்ட விலைக் கழிவைக் கணிக்கப் பொருத்தமான ஒரு சூத்திரத்தை கலம் E2 இல் நுழைக்க.

குறிப்பு : உங்கள் சூத்திரத்தில் F7 எனும் கல முகவரி அவசியம் இடம் பெறல் வேண்டும்.

  1. மேலே வழங்கிய சூத்திரத்தைப் E3 முதல் E6 வரை நகல் செய்து எனைய பொருட்களுக்கான விலைக் கழிவைக் கணிக்க.
  2. கலம் F1 இல் Total (Rs) என தலைப்பிடுவதோடு . அதனை தடித்த எழுத்தாதாக மாற்றுக.
  3. ஒவ்வொரு பொருள் விற்பனை மூலமும் கிடைக்கப்பெற்ற தொகையானது கீழே குறிப்பிட்டிருப்பது போல் கணிக்கப்படுகிறது.

Total = Amount – Discount

பென்சில் விற்பனை மூலம் பெறப்பட்ட தொகையைக் கணிக்கப் பொருத்தமான சூத்திரத்தை  F2 கலத்தில் இடுவதோடு F3 முதல் F6 வரை அதனைப் நகல்  செய்து  ஏனைய பொருட்களின் விற்பனை மூலம் பெறப்பட்ட தொகையைக் கணிக்க.

  1. ஒவ்வொரு பொருளின் விற்பனை மூலமும் பெறப்பட்ட மொத்த தொகையைக் கணிக்கப் பொருத்தமான சூத்திரத்தை கலம் F7 இல் நுழைக்க.  (F2 முதல் F6 வரையான எண்களின் கூட்டுத் தொகை) அதனை  தடித்த எழுத்தாதாக மாற்றுக
  2. ஒவ்வொரு பொருளின் விற்பனை மூலமும் கிடைக்கப்பெற்ற மொத்த தொகையை ஒரு பை-வரைபின் மூலம்காட்டுவதோடு அதன் தலைப்பாக Book shop sale என இடுக.
  3. இறுதியாக உங்கள் கோப்பை NIC No .xls என டெஸ்க்டாப்பில் சேமிக்க.
Exit mobile version