OL ICT 2024 Spreadsheet

(i) பதிவுக்கட்டணத்தின் (Registration Fee) மொத்தத் தொகை (Total Amount) ஐக் கணிப்பதற்காகக் கலம் E8 இனுள் எழுதப்பட வேண்டிய சூத்திரம் யாது?

(ii) பின்வருவனவற்றிற்காக எழுதப்பட வேண்டிய சூத்திரங்களை எழுதுக: (a) மொத்த வருமானத்தை (Total Income) கலம் E11 இல் காட்சிப்படுத்துவதற்கு. (b) மொத்தச் செலவினத்தைத் (Total Expenses) கலம் E19 இல் காட்சிப்படுத்துவதற்கு.

(iii) நிகர வருமானம் (Net Income) என்பது மொத்த வருமானத்திலிருந்து (Total income) மொத்தச் செலவினத்தைக் கழித்துப் பெறப்படுவது என்று வரையறுக்கப்படும் எனக் எடுத்துக்கொள்வதன் மூலம் நிகர வருமானத்தைக் கலம் E20 இல் காட்சிப்படுத்துவதற்கான சூத்திரம் ஒன்றைத் எழுதுக.

(iv) பங்குபற்றுநர்களின் எண்ணிக்கை (No. of participants) 200 ஆனது, C8, C13, C14, C15 ஆகிய கலங்களில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டுள்ளது. இந்தக் கலங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள 200 இற்குப் பதிலாக நுழைவு செய்யப்படக்கூடிய மிகவும் உகந்த சூத்திரத்தை எழுதுக.

(v) பின்வரும் கலங்களுக்குப் பிரயோகிக்கப்பட்ட வடிவமைப்பு (formatting) வகைகளினது இலக்கங்களையும் தெரிவுகள் (options) ஏதுமிருப்பின் அவற்றின் இலக்கங்களையும் தரப்பட்ட பட்டியலிலிருந்து தெரிவு செய்து எழுதுக:

(a) E4 (b) E20

பட்டியல்: {1 – Date, 2 – Decimal Places, 3 – Number, 4 – Percentage, 5 – Thousands separator, 6 – Time}

(vi) பின்வரும் ஒவ்வொன்றிற்கும் நிரல் (column) மற்றும் வட்ட (pie) வரைபுகளில் மிகவும் பொருத்தமான வரைபு வகை யாது?

(a) வேறுவேறான வருமான (Income), செலவின (Expenses) கூறுகளுக்கான மொத்தத் தொகையை (Total Amount) காட்சிப்படுத்த.

(b) வேறுவேறான வருமான (Income) கூறுகளுக்கான மொத்தத் தொகை சதவீதத்தில் காட்சிப்படுத்த.

(vii) பின்வரும் சூத்திரம் கலம் C20 இனுள் தவறுதலாக உள்ளீடு செய்யப்படுமாயின் அதில் காட்சிப்படுத்தப்படுவது யாதாக இருக்கும்?

=C17^ C9/2 – (180-C10*3)

Download the Worksheet

About Anoof Sir

Check Also

OL ICT 2021DBMS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *