இலங்கையில் முதன்முதலாக, பாடசாலை மட்டத்திலான ஆன்லைன் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
இம்முதல் முயற்சியில் தரம் 12 மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பாடப் பரீட்சை ஆன்லைனில் நடை பெறுகிறது. .
பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்பாக அனைத்து மாணவர்களும் ஆன்லைன் பரீட்சை பற்றித் தெரிந்துகொள்ளும் நோக்கில் ஒரு மாதிரி ஆன்லைன் பரீட்சை கீழுள்ள இணைய தளத்தில் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
http://git2.slexams.com/login/index.php
(தற்போது இந்த லிங்க் செயற்படுவதில்ல)
http://www.e-thaksalawa.moe.gov.lk/lms/course/view.php
(புதிய லிங்க்)
GIT பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மாத்திரமன்றி அனைவரும் இந்த மாதிரி ஆன்லைன் பரீட்சை முறைமையில் பயிற்சி பெற முடியும்.
மேலுள்ள தளத்திலுள்ள அதே பரீட்சை வினாக்களை அவற்றின் விடைகளுடன் எனது இந்த இணைய தளத்தில் மற்றுமொரு ஆன்லைன் பரீட்சை வடிவில் தருகிறேன்.
நான் தேர்ந்தெடுத்த விடைகள் 100% சரியானவை அல்ல. எனது தெரிவில் சில தவறுகளும் இருக்கலாம்.
தவறுகள் இருந்தால் அவற்றைக் கீழே பதிவு செய்ய முடியும்.
GIT Prototype Online Test Practice – Tamil
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil