
Convert !கன்வர்ட் (Convert) என்பது அலகு மாற்றம் செய்யும் ஒரு சிறிய கருவி. இதன் முலம் பல வகையான அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிக் கொள்ளலாம். அதாவது தூரம், வெப்பம், கனவளவு, நேரம்,வேகம், திணிவு, வலு, அடர்த்தி, அமுக்கம், சக்தி போன்ற பல வகையான .அலகுகளை இலகுவாக மாற்றிக் கொள்ளும் வசதியை இது தருகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் பயன் படக் கூடிய பல வகையான அலகு மாற்றிகளை இது கொண்டுள்ளது.
கன்வர்ட் எனும் இந்த இலவச மென்பொருள் கருவியை www. joshmadison.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Zip பைலாகக் கிடைக்கும் இது 152 கிலோ பைட் பைல் அளவைக் கொண்டுள்ளது.
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil